உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவாதத்துக்கு வழி வகுத்த வீடியோ; விரிசல் வராது என்கிறார் திருமா!

விவாதத்துக்கு வழி வகுத்த வீடியோ; விரிசல் வராது என்கிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''நான் வெளியிட்ட, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வீடியோ, விவாதத்துக்கு வழி வகுத்து விட்டது; அதனால் கூட்டணியில் எந்த விரிசலும் வராது' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேட்டியில் ஒன்றில், 'சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் என்ற பதவிக்கு வரும் போது 40 ஆண்டுகால அரசியலில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆகக்கூடாதா' என்று கேள்வி எழுப்பினார். இந்த பேட்டி அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியது. 'ஆதவ் அர்ஜூனா கருத்து முதிர்ச்சியற்றது' என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான ரவிக்குமார் கூறி இருந்தார். 'ஆதவ் அர்ஜூனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, தி.மு.க.,வை சேர்ந்த ஆ.ராசா கூறியிருந்தார்.இது குறித்து, கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்: ஆதவ் அர்ஜூனா கருத்தால் தி.மு.க., - வி.சி.க., இடையில் எந்த சலசலப்பும் இல்லை; விரிசலும் இல்லை. விரிசல் உருவாகவும் வாய்ப்பில்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற எனது வீடியோ பலத்த விவாதங்களை எழுப்பிவிட்டது. ஆதவ் அர்ஜூனா பேச்சு குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசினேன். கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி தான் உட்கட்சி விவகாரங்களில் முடிவு எடுப்போம். ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் தி.மு.க., உடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

saravanan
செப் 26, 2024 09:33

திருமாவளவன் எந்த காலத்திலும் தமிழகத்தின் முதல்வராக வர முடியாது. காரணம் இந்து மதம் சார்ந்த அவரது தெளிவற்ற பார்வைகளும், புரிதலும் மற்றும் பேச்சுக்களும் மதம் மட்டுமல்ல அரசியலிலும் அவரது நிலைப்பாடு நீரோடையாக இருந்ததில்லை. சமீபத்திய உதாரணம் மது ஒழிப்பு மாநாடு இதை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளை இணைத்து நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு போலி மதவாதங்களை ஒழிக்க போராடும் பாஜக போன்ற கட்சிகளை புறக்கணித்தது. அதாவது இவருக்கு பிடிக்கவில்லை என்றால் புறக்கணிப்பு மறுபுறம் மாட்டுக்கறி புலால் உண்ணாத ஒருவர் உண்பவரை எவ்வகையிலும் தவிர்த்தால் அதற்கு பெயர் ஆணவ போக்கு சமத்துவமற்ற நிலை அதை எதிர்த்து அவர் போராடுவார். முரண்பாடுகளின் மொத்த உருவல்லவா இத்தகைய போக்குகள். முதல்வராக மட்டுமல்ல அவர் சார்ந்த சமூக மக்களின் ஏகோபித்த தலைவராக கூட வர இயலாத மனிதர்.


Ramesh Sargam
செப் 25, 2024 20:08

விரிசல் விழுந்தாலும், முதல்வர் இவருக்கு ஒரு உடைந்துபோன சேர் போட்டு அதில் இவரை உட்காரவைத்து சரிசெய்துவிடுவார். இதுவும் வெட்கமில்லாமல் உடைந்துபோன, துருப்பிடித்த சேரில் உட்கார்ந்து அசடுவழியும். சுய மரியாதை கெட்ட ஜென்மங்கள்.


அரசூர்ராஜா
செப் 25, 2024 17:57

ஏதாவது ஒரு துணை அமைச்சருக்கு உப அமைச்சர் பரவி குடுக்கறோம்னு சேதி வந்திருச்சாம்.


Rajarajan
செப் 25, 2024 17:57

என்னோட துணை பொதுச்செயலாளர் அவர்தான். ஆனா அவரு சொன்ன கருத்து என்னோடது இல்ல.


Bhaskaran
செப் 25, 2024 14:42

தன்னைப்பற்றி தமிழ்நாடு முழுவதுமாபேசவேண்டும் என்னும் ஒரே ஆசை வேறு ஒன்னுமில்லை கொஞ்சம் ஸ்வீட் பாக்ஸ் அதிகம் கிடைக்கவும் வாய்ப்பு


ponssasi
செப் 25, 2024 14:38

திருமா தேவைக்கு அதிகமாகவே பதவி சுகத்தை அனுமதித்து விட்டார், அடிமட்ட விசிக தொண்டன் துணை முதல்வராக வேண்டும்


nagendhiran
செப் 25, 2024 14:38

பஞ்சி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்?


Kumar Kumzi
செப் 25, 2024 14:13

நீ எவ்வளோ தா முக்குனாலும் பிளாஸ்டிக் ஷேர் தான் மாமூ


ram
செப் 25, 2024 13:55

நீங்க எந்த அளவுக்கு மானம் ரோஷம் உள்ளவங்கன்னு இதுலே தெரிந்திடும். 40 வருஷமா நடத்தமுடியலே...


Murthy
செப் 25, 2024 13:07

முதுகெலும்பு உள்ளவர் ஆதவ் அர்ஜுன் . .......


சமீபத்திய செய்தி