உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவள்ளூருக்கு பதில் திருவண்ணாமலை: மனுவை சுற்றலில் விடும் சி.எம்., செல்

திருவள்ளூருக்கு பதில் திருவண்ணாமலை: மனுவை சுற்றலில் விடும் சி.எம்., செல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மாவட்ட நிர்வாகத்திடம் தரப்படும் மனுக்கள் தான் கிடப்புக்கு போகின்றன என்றால், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் கொடுக்கப்படும் மனுக்களும், சுற்றலில் விடப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.தாலுகா அளவில், மாவட்ட அளவில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் பலர் மனு கொடுக்கின்றனர். அங்காவது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வெளியூர்களில் இருந்து வந்து காத்திருந்து மனு அளிக்கின்றனர். தனிப்பிரிவு அலுவலக ஊழியர்கள் மனுவை வாங்கி, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மாவட்டத்திற்கு அனுப்புகின்றனர். எந்த நடவடிக்கையும் எடுக்காத அலுவலரிடமே, அந்த மனு மீண்டும் செல்கிறது. அவர் நடவடிக்கை எடுத்து விட்டதாக, தனிப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கிறார். தீர்வு காணப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது.பல முறை மனு கொடுத்தவர்கள் ஏராளம். மனு கொடுப்பவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்றால், அதை அவரிடமே கூறலாம்; அதையும் செய்வதில்லை. இந்நிலையில், வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த மனுவை, திருவள்ளுவர் மாவட்டத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அனுப்பி உள்ளனர். இதுபோன்ற நிலை இருந்தால், மனுவிற்கு எப்படி தீர்வு கிடைக்கும் என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் உதய்பாஸ்கர் கூறியதாவது: முதல்வரின் தனிப்பிரிவு தற்போது காட்சி துறையாக உள்ளது. எனக்கு சொந்தமான நிலம், திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை கைப்பற்ற சிலர் முயற்சித்து வருகின்றனர். நிலத்தை காப்பாற்ற, பட்டா பெயர் மாற்றம் கோரி, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு அளித்தேன். அந்த மனுவை, திருவள்ளூர் கலெக்டருக்கு அனுப்பாமல், திருவண்ணாமலை கலெக்டருக்கு அனுப்பி உள்ளனர்.அதேபோல, தனியார் நிறுவனம் தொடர்பாக, கலெக்டர் நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த மனுவை, தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்பி உள்ளனர். மனுவுக்கு நிவாரணம் அளிக்காமல் சுற்றலில் விடுகின்றனர். தனிப்பிரிவு சுதந்திரமாக செயல்பட, தலைமை செயலகத்தை விட்டு, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தவறுதலாக நடந்திருக்கலாம்!

பொது மக்கள் அளிக்கும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்ட துறை பதில் அளித்தாலும், மனுதாரரிடம் உண்மை நிலையை கேட்டறிகிறோம். மனு மாற்றி அனுப்பப்பட்டது, தவறுதலாக நடந்திருக்கலாம்.- முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

BALAJI
மே 30, 2024 04:48

இதே போல் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் பட்டா பெயர் திருத்தம் தொடர்பாக சிஎம் செல்லில் புகார் அளித்திருந்தேன். ஆனால் அந்தப் புகார் ஆனது நடவடிக்கை எடுக்காத அதே உதவி தாசில்தார் கே சிஎம் செல் மூலம் அனுப்பப்பட்டு அவர் அது தொடர்பாக விசாரிக்காமலேயே மனுவை மனு விசாரித்து அம்மனு நிராகரிக்கப்பட்டதாக ஆன்லைனில் ஏற்றி விடுகின்றனர். அதன் பிறகு ரூ 3000 பெற்றுக் கொண்ட பிறகு பட்டாவில் பெயர் திருத்தம் செய்து கொடுத்தனர்.


Anbu Natesan
மே 30, 2024 01:33

ஐயா வணக்கம் பட்டா வழங்க வேண்டி 10 ஆண்டுகளாக மனு கொடுத்து இது வரையில் நான் ஓயவில்லை மேலும் இனையத்தில் மனு, அதற்க்கு உரிய கட்டணம் செலுத்தி இது நாள் வரை எனது வீட்டுமனை பிறிவு 2 ம் வகை சேர்ந்து இதை சரியான முறையில் அளப்பதும் இல்லை. மேலும் முதல் மனை அளிப்பது மிகவும் எளிது உண்மை என்ன வென்றால் 0 புள்ளியில் இருந்து 30 அடி தூரத்தை அளிப்பது மிகவும் எளிது அதைவிட்டுவிட்டு ஏதோ ஒரு புள்ளியில் இருந்து அளந்து விட்டு வேறு சர்வே எண்ணில் 13 அடி சாலையில் போய் விட்டது என கூறி 6 முறை சப் டிவிஷன் இன்வாலிங் பட்டா அளக்க பணம் கட்டி 3 ஆண்டுகளாக 60 வயது மனிதனை அலைய வைத்து கொன்டு உள்ளார்கள் இந்த நிலையில் மக்களின் குறைதீர்ப்பு மனு அளித்து 6 மனு ஒரு வருட காலத்தில் மனு அளித்து அந்த மனு வாலாஜா தாலூக்கா அலுவலகத்தில் அனுப்ப வேண்டிய மனு 6 மனு ஆற்காடு தாலுக்கா அலுவலகத்தில் சேர்ந்து விடும் அந்த அலுவலகத்தில் இருந்து குறுஞ்செய்தி அனுப்புவார்கள் தன்/ரெவ்/ரிப்ட்/இ/காலம்ஜித்ப்/21மர்24/7916984 நிராகரிக்கப்பட்டது மேலும் விவரங்களுக்கு 1100ஐஅழைக்கவும் என குறுஞ்செய்தி அனுப்புவார்கள் இது சம்பந்தமாக நேரில் சந்தித்து பேசினால் தாங்கள் மீண்டும் புதிய மனு அளியுங்கள் வாலாஜா அலுவலகத்தில் எங்கள் அலுவலகத்தில் உங்கள் மனு எங்களுக்கு வரவில்லை குறுஞ்செய்தி நாங்கள் அனுப்புவதில்லை மீண்டும் புதிய மனு அளித்து பின்னர் வாருங்கள் மிக மிக முக்கியம் 0 வில் இருந்து முதல் மனை அளக்க மறுக்கிறார்கள் ஏதோ தவறை மறைப்பதற்கு என்னை எனது மனுவை அலைய வைக்கிறார்கள் இந்த தரவை சுட்டி காட்ட தாங்கள் உதவிபுரிவீர் என நம்பிக்கை இருப்பது வீண்போகாது என நம்புகிறேன் நன்றி


S MURALIDARAN
மே 29, 2024 23:52

தவறுதலாக நடந்திருக்கலாம் என்று சொல்வது பொறுப்பான பதில் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் துறை ரீதியாக விசாரிக்கப்பட வேண்டும்.


DHANASEKAR
மே 29, 2024 14:18

Petition submitted to cm cell are not given any kind of respect.For first one month they indicate petition submitted 1day 2 days back after one month they indicate as 1month back 2months back and so on.But they never bother about redressal of grevience of the aggrieved.If this is the response for a petition submitted to the highest elected representative office of a state where else can a aggrieved common man appeal


Arputham
மே 28, 2024 22:30

என்னுடைய கணவர் முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல், இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் இது தொடர்பாக மனு குடுத்தேன் எந்த நடவடிக்கையும் இல்லை காரணம் காவல் துறை என் கணவர் குடும்பம்பதிநறுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், எனக்கும் என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் எந்த நிதியும் கிடைக்கவில்லை, நான் முதல்வரை முழுமையாக நம்பினேன், என் நம்பிக்கை வீணானது, மனம் உடைந்தேன்


Mohanakrishnan
மே 28, 2024 22:18

No question and this is called thiruttu model


Sankaran Natarajan
மே 28, 2024 21:17

அதேதோ கதிதான் எல்லா மனுவுக்கும். திராவிட மாடலுக்கும் "மனு"வுக்கும் ஒத்துப் போகாது.


theruvasagan
மே 28, 2024 17:32

பிரசார கூட்டங்களின் போது மேடையில் வைத்திருந்த அந்த பெட்டியில் போட்ட மனுக்களின் கதி என்னவாயின என்று தெரிந்துமா இந்த கேள்வி


Suresh Hivec
மே 28, 2024 15:59

ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் ஒரு சாதாரண மனிதனின் மனுவின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள்..


GMM
மே 28, 2024 15:09

வக்கிலுக்கு சொந்தமான நிலத்தை எப்படி கைப்பற்ற முடியும்? லட்சம் மக்களுக்கு சொந்த நிலம் உண்டு. இப்படி புகார் இல்லை. பொய் புகார்? பட்டா நில உரிமை. பொதுவாக பொது மக்கள் கோரிக்கை மனுவில், அலுவலர் புரியும் வகையில் விவரம் இருக்காது. எல்லா அலுவலகத்தில் format தேவை. குறைந்த பட்சம் கட்டணம் வசூலிக்க வேண்டும். கிரய பத்திர பதிவு, முந்தைய பட்டா விவரம், நில வரி, வீட்டு வரி விவரம் தேவை. அரசு அலுவலகத்தில் தாமதம், ஊழல் இருக்கும்? மக்கள் மனுக்களில் குறைபாடு இருக்கும். முதலில் சம்பந்தப்பட்ட அலுவலகம், பின் தவறு அறிய தகவல் உரிமை அதன் பின் மனு. அதன் பின் முதல்வர் பிரிவுக்கு அனுப்பினால் புரியும் வகையில் இருக்கும். நடவடிக்கை எடுக்க எளிது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை