உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி இது: தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி இது: தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை, சென்னையில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்தார். இத்திட்டமானது மாதத்தின் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தப்படும்முன்னதாக, இந்த திட்டம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில், என்னுடைய மனசுக்கு பிடிச்ச திட்டமா, உருவாகி இருப்பது தான் தாயுமானவர் திட்டம். கூட்டுறவுத் துறை சார்பில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குகிற தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முன்மாதிரி முயற்சி

இப்படி அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே சென்று போய் கொடுப்பது இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி. ஒரு திட்டத்தை அறிவிப்பதுடன் கடமை முடிந்து விடுவதாக நாம் நினைப்பதில்லை. அந்தத் திட்டத்தின் பலன், பயன் கடைக்கோடி மனிதரையும் சென்று சேர்ந்ததா, என்று கண்காணிப்பதையும் கடமையாக நினைக்கிறேன்.

சிரமத்தை உணர்ந்து...!

அப்படி வயது முதிர்ந்தோறும், மாற்றுத் திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணர்ந்து இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தத் திட்டத்தை 34 ஆயிரத்து 809 நியாய விலை கடைகளில் செயல்படுத்த போகிறோம். 70 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 980 பேர், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்தி 70 ஆயிரத்து 454 பேர் இந்தத் திட்டத்தால் பயனடைய போகிறார்கள்.

உயிர் காக்கும் கடமை

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்து விடும். இதற்காக கூட்டுறவுத்துறைக்கு ஆகப் போகிற ரூ. 30 கோடியே 16 லட்சம் ரூபாயை கூடுதல் செலவாக கருதாமல் மக்களுக்கு செய்கிற உயிர் காக்கும் கடமையாக நாங்கள் நினைக்கிறோம். இது கூட்டுறவு துறையின் மிகப்பெரிய சேவை. அந்த துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப் போகிற மிகப் பெரிய கடமை. https://x.com/mkstalin/status/1955075512386154940

பட்டினி சாவு இல்லாத மாநிலம்

தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 328 நியாய விலை கடைகள் இருக்கிறது. இதில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாய விலை கடைகளை திறந்து இருக்கிறோம். கருணாநிதி வழியில் இந்த நியாய விலை கடைகளை நாங்கள் முறையாக சிறப்பாக நடத்துகிற காரணத்தினால் தான் தமிழகம் இன்று பட்டினி சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது. இந்த ரேஷன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக முயற்சி எடுத்து இருக்கிறோம்.

வேண்டுகோள்

இந்த நேரத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் 100 விழுக்காடு நிறைவேறுகிற வகையில் உங்கள் பணி அமையும். உங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மனம் குளிர வகையில் நீங்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகிற நல்ல பெயர் தான் ஆட்சிக்கு கிடைக்கிற பாராட்டு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

Minimole P C
ஆக 18, 2025 10:32

"Thayumanavar" if he doesnt do corruption, every thing will be alright for everybody. It is corrupted politicians who do all nonsense among people and we all are in permanent problems and we live and die as less blessed and less lucky people.


shyamnats
ஆக 15, 2025 11:40

கட்டிடம் ரொம்ப ஸ்ட்ராங்கு, ஆனால் அடித்தளம் basement ரொம்ப வீக்கு. அலங்கார, வார்த்தை ஜால திட்டங்கள் ஒவ்வொரு நாளும் 2026 வரை வரும்போல. செயல்பாடு பொறுத்திருந்து பார்க்கணும்.


Ramesh Sargam
ஆக 13, 2025 22:23

முதலில் அப்பாவும் நானே. இப்பொழுது தாயுமானவனும் நானே. அடுத்து தாத்தா என்றால் கோபம் வரும். ஆகையால் அங்கிளும் நானே.


S.V.Srinivasan
ஆக 13, 2025 09:15

கொண்டு வரும் திட்டங்களுக்கு சான்றிதழ்கள் மக்கள் கொடுக்க வேண்டும். தானே சொல்லிக்கிட்டு திரிந்தால் அதுக்கு பெயர் சுய விளம்பரம் தம்பட்டம் என்னவோ போடா மாதவா.


Raj
ஆக 13, 2025 06:06

2026 தேர்தலுக்காக போடப்பட்ட திட்டம்.


V Venkatachalam
ஆக 12, 2025 20:34

இந்த அலங்கார வார்த்தைகள், அதான் தாயுமானவர் திட்டம் ன்னா என்னான்னு தெரியாது. அதுக்கு வழக்கம்போல இந்த திருட்டு தீயமுக காரனுங்களை திட்டிகிட்டே இருக்குங்க. அது மட்டுமல்ல அதோட ஹை லைட் என்னான்னா சாராய வியாபாரிக்கு ஓட்டு போடாதுங்க.


தேவதாஸ் புனே
ஆக 12, 2025 19:33

தாயுமானவர்.... சாமி பேராச்சே...... எப்படி ..... பகுத்தறிவாதிகள் தேர்ந்தெடுத்தார்கள் ...... ஓ..... தேர்தல் முடியும்வரை இந்த திட்டம் இருக்கும்....... அப்புறம் .....கருணாநிதிமானவர்ன்னு இல்லைன்னா கலைஞருமானவயர்ன்னு..... ஒரு புது திட்டம் கொண்டுவரலாம்....


D.Ambujavalli
ஆக 12, 2025 16:43

வயதான, தனியாக இருப்பவர்கள், மாற்றுத்திறனானிகள், ஏற்கெனவே இவர்களைக் குறி வைத்து குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், வீடு தேடி வந்து வேறா? எங்களுக்கு rashan ஏ வேண்டாம், உயிர், வீட்டிலுள்ள பொருட்கள் மிச்சம் இருந்தால் போதும் என்று முதியோர்கள் கதறும் குரல்தான் கேட்கிறது தேர்வுக்கு முதல்நாள் இரவு, பாடப்புத்தகத்தைத் தேடி எடுத்துப் படிப்பது போல அரசுப்பணத்தை , நம் வரிப்பணத்தை அள்ளி விடும் திட்டம்தான் இது முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளே, எச்சரிக்கை, இனி ரேஷன் வழங்குபவர் வேஷத்திலும் யார் வருவார்களோ தெரியவில்லை


V RAMASWAMY
ஆக 12, 2025 16:38

முதலில் அப்பா, இப்பொழுது தாயுமானவர், அப்புறம்?


Kjp
ஆக 12, 2025 15:07

இதப் போயி இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலம் என்று சொல்கிறீர்கள். 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமிழகத்தை முன்மாதிரியான மாநிலமாக மாற்றி இருக்கிறீர்கள் என்பது எவ்வளவு பெருமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை