உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி பேசிய ஆபாச பேச்சு இது தான் !

பொன்முடி பேசிய ஆபாச பேச்சு இது தான் !

ஈ.வெ.ராமசாமி பெயரில் எத்தனை இயக்கங்கள் இருந்தாலும், 'பெரியாரிஸ்ட்' என்ற அடிப்படையில், அனைவரும் அவரது கொள்கையை ஏற்று செயல்படுகிறோம். இது தான் ஈ.வெ.ராமசாமிக்கு கிடைத்த பெருமை. பெரியாரிஸ்ட் என்ற கொள்கையுடன் வாழ்ந்தால், சிறப்பாக வாழ முடியும். இயக்க ரீதியாக பிரிந்து செயல்பட்டாலும், ஈ.வெ.ராமசாமியை மறுக்கவோ, மறக்கவே முடியாது. நான், 1984ல் தி.மு.க.,வில் இணைந்ததாக இங்கு பேசிய இயக்குனர் தெரிவித்தார்; அது தவறு.கடந்த 1971ல், நான் அண்ணாமலை பல்கலையில் படித்து கொண்டிருந்த போது, திராவிட மாணவர் முன்னேற்ற கழகத்தில் இருந்தவன். படித்து முடித்து கல்லுாரி பேராசிரியராக பணியாற்றினேன்.அப்போது 'அடல்ட்ஸ் ஒன்லி' பட்டிமன்றங்கள் நடத்தப்படும். பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன தெரியுமா... 'கடவுள் கொள்கையை பரப்புவதில் காமச்சுவை அதிகம் கையாண்டது சைவமே, வைணவமே' என்பது தான். அந்த பட்டிமன்றங்களுக்கு, செல்வேந்திரன் நடுவர்; நானும், சபாபதி மோகனும் பேசுவோம்.காமச்சுவை பரப்புவது குறித்து இங்கே பேசலாமா... இங்கு பெண்கள் கொஞ்சம் பேர் உள்ளனர்; பெண்கள் யாரும் தப்பாக நினைக்க வேண்டாம்.

அச்சிடத் தகாத வார்த்தை

விலை மாது வீட்டிற்கு ஒருவன் போகிறான். அந்த வீட்டில் இருந்த பெண், அவனிடம், 'நீங்கள் சைவமா, வைணமா' எனக் கேட்டார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.'பணம் இவ்வளவுன்னு கேட்டால் சரி... என்னடா இது, சைவமா, வைணவமா எனக் கேட்கிறாரே...' என, அவன் குழம்புகிறான். அந்த அம்மா சொல்லிச்சு, சைவம்னா இப்படி , (நெற்றியில் பட்டை போடுவது போல் சைகை காட்டுகிறார் ) படுத்துக்*** (அச்சிடத் தகாத வார்த்தை) வைணவம்னா (நாமம் போடுவது போல் சைகை காட்டுகிறார்) நின்னுக்கிட்*** (அச்சிடத் தகாத வார்த்தை) நின்னுக்கின்***னா அஞ்சு, படுத்தா *** 10 ) என சொன்னார். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இவரது பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 133 )

Palanisamy T
மே 05, 2025 11:09

தமிழர்கள் சைவ நெறி வைணவ வெறி இரண்டு நெறிகளையும் எந்த வேறுபாடில்லாமல் இரண்டு கண்களாக வணங்குகின்றார்கள். சைவநெறி சுத்த தமிழ் பன்னிரு ஆழ்வார்களால் இனிய தமிழால் போற்றப் பட்டவர் வைண கடவுளான திருமால். ஆனால் வட இந்தியாவில் வைணவக் கடவுளை அவர்கள் பாணியில் சமஸ்க்ருத மொழியில் வணங்குகின்றார்கள். சமஸ்க்ருத மொழியென்றால் அங்கே உண்மைகளை காண்பது அரிதிலும் அரிது..அந்த உலகத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை. அதை தமிழகத்தில் கொண்டுவந்து தமிழர்களை குழப்ப வேண்டாம். ஒரு படித்த பேராசிரியர் என்ற முறையில் எதையும் நன்குப் படித்து ஆய்வு செய்யப் பட்டப் பின் பேசுங்கள். இல்லை யென்றால் நீங்கள் படித்த படிப்புக்கும் எந்த மரியாதையுமில்லை. திருக்குறள் சைவநெறி நூல். முப்பாலிலொன்று இன்பத்துப் பால். அதிலேயும் காமச் சுவைப் பற்றி வள்ளுவர் பாடியுள்ளாரே. குமரிமுனையில் அன்று கருணாதி கட்டிய திருவள்ளுவர் சிலை, அங்கே உங்கள் முதல்வர் கடலில் இப்போது கட்டிய பாலம், மேலும் சைவத்தையும் வைணவத்தையும் நீங்கள் கேவலப் படுத்தியது போல் இன்பதுப் பால்கொண்ட திருக்குறளையும் கேவலப் படுத்தலாமே "படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்" போலுள்ளது உங்களின் சிந்தனை, கலாச்சாரம்.


Rajendran Rajendran
மே 01, 2025 18:57

குடி குடியை கெடுக்கும் என்றும். குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்றும். அந்தப் பாட்டிலில் எழுதி இருக்கிறார்கள். இதைத் தெரிந்தும் எப்படி குடிக்கிறார்கள். அப்படித்தான் இந்த பேச்சும்


malathy
ஏப் 24, 2025 15:28

எவ்வளவு அசிங்கமாக பேசினாலும் அநியாயம் எவ்வளவு செய்தாலும் தி மு க வெற்றி பெறுகிறது தமிழ் மக்கள் கொதிப்பது ஒரு சில வினாடிகளுக்கு தான் . தேர்தலில் ஜெயிக்க போவது தி மு க. இதை எழுதும் போது எரிச்சல் கோபம் இயலாமை வலி .... வோட்டு அளிப்பவர்களில் பெண்கள் இல்லையா ? அவர்களும் சுரணை கெட்டவர்கள் ஆகி விட்டார்களா


Veeraputhiran Balasubramoniam
ஏப் 24, 2025 14:18

"உண்மையின் உரைகல்" என்று தன்னை கூறிக்கொள்ள முழு தகுதியும் கொண்ட ஒரே தினசரி நாளிதள் "தினமலர்" என்பதர்க்கு இந்த ஒர் பதிவே சாட்சி... இது ஒரு ஆபாச பதிவு, அரசியல் பதிவு, மத உணர்வு சர்ந்த பதிவாக... இருந்தும் "உண்மயான பதிவு" அதனை இருட்டடிப்பு செய்யமல், அவர் பேசியது பேசிய படியே உள்ளபடியே அப்படியே திரிக்காமல் உலகம் முழுதும் கொண்டு சென்ற பெருமை தினமலர் க்கு மட்டுமே உள்ளது அன்றும் இன்றும் என்றும் உள்ளது. அது சங்கராசாரியார் கைது ஆகட்டும், கருணாநிதி கைது ஆகட்டும், ஜயலலிதா சிறை சென்றதாகட்டும்... முதலில் பாரபட்சம் பாராமல் அன்றே வெளியிடுள் ஒரே பத்திரிகை, அதன் 30 ஆண்டு வாசகராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்


என்றும் இந்தியன்
ஏப் 17, 2025 16:57

திமுக என்றால் திருடர்கள் கயவர்கள் என்று அச்சடித்தது போல இருக்கின்றது ஒவ்வொரு திமுக அங்கத்தினரும். இப்படி இருக்கும் போது பொன் முடியின் ஆபாச பேச்சு சரிதான். சரியான வழியில் வரும் யாரும் இப்படி மோசமாக இருப்பதில்லை


S.V.Srinivasan
ஏப் 16, 2025 07:33

அது சரி நீங்க கல்லூரியில் படிச்சு பாஸ் ஆனீங்களா? ஒழுங்கா படிச்சு பாஸ் ஆனீங்களா இல்ல பிட் அடிச்சு பாஸ் ஆனீங்களா? நல்ல வேலை நீங்க கல்லூரியில் பேராசிரியாக தொடரவில்லை. அப்படி நடந்திருந்தால், மாணவர்கள் வாழ்க்கை கேள்வி குறி ஆகியிருக்கும்.


Minimole P C
ஏப் 16, 2025 07:29

Periyarists purposely connected saivam and vainavam for their third rated imaginations. Is there any relation?


Ragavan sv
ஏப் 13, 2025 17:20

மிகமோசமான ஆபாசமான கீழ்தரமான பேச்சு பொது மேடையில் பேச தகுதி இல்லை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்


K V Ramadoss
ஏப் 13, 2025 13:37

யார் அந்த ஒருவன்.. பொன்முடியாகத்தான் இருக்க வேண்டும்..


Nagarajan S
ஏப் 13, 2025 20:38

ஆமாம் அந்த தங்க ... தான்


S.jayaram
ஏப் 13, 2025 05:17

நான் நினைக்கிறேன் பெரியார் வழி வந்த பேராசிரயர்கள் அவர்கள் ஆணாயிருந்தாலும், பென்னாயிருந்தாலும் சரி எல்லோரும் இந்த ரகம்தான் போலும் அதுதான் அவர்களின் சிந்தனையில் காமம் ஒன்றே கட்டமைகப் பட்டுள்ளது போலும், இதற்கு முன் பேராசிரியர் என்று ஒருத்தன் இருந்தான், அவன் என்னடான்னா சட்ட சபையிலேயே பெண்ணுறுபினர்கள் இருக்கையில் வேஷ்டியை அவிழ்த்துக் காட்டினான், தண் மகள் கூட படித்த மானவியையே இழுத்துக்கொண்டு ஒடிவந்தவன். இப்போ இவன் ஒருவேளை இவன் பல இடங்களில் போய் இப்படி பரிட்சை எழுதியவன் போல,


புதிய வீடியோ