உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: வள்ளுவரை கறை படுத்துவது யார்?

இது உங்கள் இடம்: வள்ளுவரை கறை படுத்துவது யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்துடன், 'பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி' என்ற வாழ்த்து செய்தியை கவர்னர் ரவி வெளியிட்டது, தி.மு.க.,வினரை கொதிப்படைய செய்துள்ளது. கவர்னர் ரவிக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது' என, கண்டித்துள்ளார்.ஆனால், ஒருவர் மீது குறை சொல்லி குற்றம் சாட்டுவதற்கு முன், தங்களுக்கு அந்த தகுதி உள்ளதா என்று பல முறை சிந்தித்து தெளிந்த பின், குற்றம் கூறுவது தான் அறிவுடையோருக்கு அடையாளம். அதிலும் பொறுப்பான பதவியில் இருப்போர், ஓராயிரம் முறை சிந்தித்து தான் வார்த்தைகளை கூற வேண்டும்.வள்ளுவருக்கு, 133 அடியில் ஒரு சிலையை நிறுவி, தலைநகரில் வள்ளுவர் பெயரில் ஒரு கோட்டமும் கட்டி வைத்து விட்டால் மட்டும், அவருக்கு புகழ் சேர்த்தது போலாகி விடுமா?தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், வள்ளுவர் வலியுறுத்திய வாழ்க்கை நெறிமுறைகளை, 1 சதவீதமாவது கடைப்பிடிக்கின்றனரா...? அவர்கள் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லட்டும்...திருக்குறளில், கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில், 'நாட்டில் வாழும் குடிமக்களே, குடிக்கக் கூடாது' என்று வலியுறுத்தி, 10 குறள்களை எழுதியிருக்க, அவர் வழியில் நடப்பதாக கூறும் திராவிட மாடல் அரசு, தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, வியாபாரம் செய்து வருகிறது.இப்போது சொல்லுங்கள்... வள்ளுவரையும், அவர் கூறிய கருத்துகளையும் கறைப்படுத்தி கொண்டிருப்பவர் கவர்னரா இல்லை முதல்வரா?எனவே, அரசு நடத்தி கொண்டிருக்கும் மது விற்பனையை நிறுத்தி, தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மது தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்தி, பின் வள்ளுவருக்கும், அவரது சிலைக்கும், அவர் பெயரில் அமைந்துள்ள கோட்டத்திற்கும் பெருமை சேருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Dinesh
ஜன 21, 2024 13:39

Who the hell are you justify it? During pandemic time everything was completely shut. During natural calamities no one their mouth rather finding shelter Kindly don't do politics anyone unnecessarily. India is known for Unity in Diversity . Respect everyone but don't don't bring one culture is big another one is dominant. In one country one particular religious small in number but in any other country in the world big. Nature is God Your belief is God God is really within you said by Ramakrishna & followed by Swami Vivekanda Don't bring the country in crisis at any cost LIVE THE LIFE FOR OTHERS ( EVERYONE)


அப்புசாமி
ஜன 20, 2024 21:21

ரெண்டு சைடிலேயும் வள்ளுவர் சொற்படி, தண்ணி அடிக்காதவங்க கை தூக்குங்க?


Sivagiri
ஜன 20, 2024 14:17

எப்போதும் கேள்விப்பட்டதில்லை , கைலாயம் முதல் குமரி வரை சிவமும் சைவமும் மட்டுமே ஆதிகாலம் தொட்டு இருந்துள்ளது - - தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் கிடையாது - ஆதிகாலம் முதல் , சிவனை மட்டுமே வணங்கும் சைவ சமயமே , சுத்த தமிழனின் மதம் கலாசாரம் பண்பாடு வாழ்க்கை நடைமுறை எல்லாம் - காவி / ருத்ராட்சம் / விபூதி பட்டை அணிந்தால் சைவ தீட்சை கொண்ட - சிவனடியார் என்றே அழைக்கப்படுகிறார் , - கடவுள் நம்பிக்கையே கிடையாது , தமிழ்நாட்டில் தோன்றிய சான்றோர்கள் புலவர்கள் அனைவருமே கடவுள் மறுப்பாளர்கள் , என்ற பிரச்சாரத்தில் , தமிழனின் மூளைக்கும் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள் . .. வணங்கும் கூட்டத்தின் பிரச்சார யுக்தி - - சைவத்தில் , சைவம் என்றே உள்ளது சனாதனம் என்பது இல்லை . . .


Jay
ஜன 20, 2024 13:14

திருவள்ளுவர் காவியுடைய தான் அணிந்திருந்தாரா என்பது வரலாற்று பூர்வமாக எங்கும் படிக்க முடியவில்லை. பழங்காலங்களில் காவியுடை அணிவது என்பது சாதாரணமான விஷயம் அதிலும் மகானாக இருக்கும் திருவள்ளுவர் காவியுடை அணிந்து இருந்திருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவர் காவி உடை ப்பவராக இருந்திருந்தால் திமுக அதை வெள்ளை உடையாக மாற்றி இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது கூட வள்ளலார் நெற்றி முழுவதும் திருநீருடன் தான் எல்லா இடங்களிலும் அவருடைய திருவுருவம் இருக்கும் ஆனால் திமுக அதை அப்பட்டமாக திருநீரை அழித்து வெறும் நெத்தியாகத்தான் அவருடைய திருவுருவத்தை எல்லா இடங்களிலும் காட்டுகிறார்கள். இதை பார்க்கும் போது கண்டிப்பாக வள்ளுவருக்கும் இதையே திமுக செய்திருக்கும். பெரும்பான்மையரின் வரலாற்றை திரித்து மறைத்து அவர்கள் வேறு மதத்திற்கு மாற அனைத்து உள்ளடி வேலைகளையும் தலைமை குடும்பம் கண்டிப்பாக செய்யும்.


NALAM VIRUMBI
ஜன 20, 2024 11:37

ஆம். இந்த அரசு இதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி, 1330 குறள்களில் ஒன்றைக் கூட கடைபிடித்தது கிடையாது.


RAMAKRISHNAN NATESAN
ஜன 20, 2024 20:53

முக்கியமா பிறனில் விழையாமையை பாலோ பண்ணவே மாட்டோம் ...... மாற்றான் தோட்டாததுக்கும் மணம் உண்டு என்று சொன்னதே அதுக்காகத்தான் ....


Swaminadhan Krishnamoorthy
ஜன 20, 2024 11:32

Thiruvalluvar could only have been an ardent Hindu saint and a great believer in God as his inaugural Kural and a number of other Kurals indisputably show. Please remember he lived at a time when Christianity was not even 2 centuries old and Mohammad had not come into being. It is only the atheistic Dravidian fellows who exhibit their ignorance by false propaganda. Swaminadhan Krishnamoorthy


Dharmavaan
ஜன 20, 2024 16:16

Christianity was not there at all


Swaminadhan Krishnamoorthy
ஜன 20, 2024 11:17

திருவள்ளுவர் பெரிய கடவுள் பக்தராகவும் தவிர வேறு யாராகவும் இருந்திருக்க முடியாது. அவர் இருந்த காலம் கிறிஸ்துவுக்கு பின் இரெண்டாவது நூற்றாண்டு. அப்போது கிறிஸ்டியானிக்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமமும் கிடையாது. திருக்குறளில் முதல் குரள் மற்றும் பல குரள்களில் பகவானை பற்றி பக்தியோடு கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் அவரை ஒரு துறவியாக சித்தரிப்பதில் எந்த தவறும் கொடையாது. இந்த நாஸ்தீக திராவிட கூட்டம்தான் அவர் அப்படி இல்லை என்று உளறி கொண்டிருக்கிறது.


Sridhar
ஜன 20, 2024 11:09

நாயக்கன் சொன்ன மாதிரி திருக்குறள் சொல்லிட்டு போயிருக்கணும். திருக்குறளுக்கும் திருட்டு கும்பலுக்கும் செட்டே ஆவாது. பாண்டிய சோழர்களுக்குமே ஆச்சரியப்படு வதற்கில்லை. அவுங்க தாரக மந்திரமே


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 20, 2024 09:35

1967 க்கு முன்பெல்லாம் திருவள்ளுவர் காவி உடை அணிந்து நீள்சடை கொண்டு கழுத்தில் ருத்ராஷ மாலை அணிந்து நெற்றியில் திருநீறு துலங்கத்தான் காட்சி தந்தார். 67 க்குப்பின்னரே அவர் சாயம் வெளுக்கத்துவங்கியது


Duruvesan
ஜன 20, 2024 09:27

விடியல் சார் வாழ்க


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை