உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெற முடியாது

ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெற முடியாது

சென்னை : “ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லா தவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெற முடியாது,” என, முன்னாள் கவர்னர் தமிழிசை தெரிவித்து உள்ளார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் நெடுங்காலமாக, ஹிந்துக்கள் என்றால் கேலி, கிண்டல் செய்யலாம், அவர்களின் கொள்கைகளை, கலாசாரத்தை கீழ்த்தரமாக பேசலாம் என்ற சிந்தனை பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதேபோல், தமிழையும், முருகனையும்; தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிப்பதற்கான ஏற்பாடு, இங்கு நெடுங்காலமாக உள்ளது.தமிழ் ஆன்மிகத்தை வளர்த்தது; ஆன்மிகம் தமிழை வளர்த்தது. பாம்பன் சுவாமிகள் மட்டும், 6,666 தமிழ் பாடல்களை, முருகன் மீது பாடியுள்ளார். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, தமிழகத்திற்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலை வலியுறுத்தப்படுகிறது. இது தேர்தல் நேரங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. இனிமேல் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடுவோர்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை, தமிழகத்தில் உருவாக வேண்டும். ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாதவர்கள், இனிமேல் தமிழக மக்களின் வாழ்த்துக்களை பெற முடியாது என்ற நிலை ஏற்பட வேண்டும். முருகன் கோவிலுக்கு வராதவர்கள், தமிழ் கடவுள் முருகன் என்கின்றனர்.முருகன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், முருகன் மாநாடு நடத்தினர். தமிழுக்காக வாழ்வதாக கூறுவோர், முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனரா? ஹிந்து மத விழாக்களில் பங்கேற்றுள்ளனரா? ஏன் இந்த பாரபட்சம். இரண்டாம் தர மக்களாக ஹிந்துக்களை நினைக்கின்றனர். இனி பாரபட்சம் பார்க்க முடியாது. எங்களின் எழுச்சி, தமிழகத்தின் எழுச்சியாக இருக்கும். இந்த உணர்வு மேலோங்க வேண்டும்.முருகன் மாநாட்டுக்கு அனைத்து ஆன்மிகவாதிகளும் வரவில்லை. தி.மு.க.,வினர், ரகசியமாக வந்தனர். அமைச்சர் துரைமுருகன், முருக பக்தர்; ஒளிந்து ஒளிந்து பக்தியை காட்டாமல், உண்மையான பக்தி இருந்தால், வெளிப்படையாக காட்டலாமே? இவ்வாறு அவர் கூறினார்.- தமிழிசை, முன்னாள் கவர்னர்

நல்லது நடப்பதற்கு

விஜய் துணை நிற்கணும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாளைய தீர்ப்பில் ஆரம்பித்து, அழகிய தமிழ் மகனாக வலம் வந்து, திருப்பாச்சியில் தங்கை பாசத்தையும், சிவகாசியில் தாயின் அன்பையும் பிரதிபலித்து, துப்பாக்கி ஏந்தி பயங்கரவாதிகளை அழித்து, தேசபக்தியை வெளிப்படுத்தி, வாரிசு அரசியலை எதிர்த்ததால், தனக்கு வந்த இன்னல்களில் இருந்து சுறாவாக நீந்தி, கில்லியாக வெற்றி கொண்ட தமிழன், ஜனநாயகன் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள். புதிய கீதை வடிவில் தீய சக்திகளை எதிர்த்து, நல்லது நடக்க துணைநிற்க வாழ்த்துகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Umapathy AP
ஜூன் 24, 2025 19:06

முதலில் தமிழிசை, தமிழுக்கு மற்றும் தனக்கு மரியாதை தந்து ஓட்டுபோட்ட தமிழனுக்கு விசுவாசமாகயில்லை எனினும் துரோகிபோல பேசியது சரியல்ல பிறகு மற்றவரை வசைபாடலாம்


Ramesh Sargam
ஜூன் 23, 2025 14:38

சகோதரியே, அந்த பாழாப்போன கேடுகெட்ட திமுக தலைவர்களிடமிருந்து ஹிந்துக்களுக்கு எந்த வாழ்த்தும் தேவை இல்லை. அவர்கள் வாழ்த்து தெரிவித்து நாம் சிறப்பாக வாழப்போவதில்லை. நமக்கு முருகன் இருக்கிறார். கடவுள் முருகன் நம்மை நன்றாக வாழவைப்பர். ஓம் முருகா என்று சொன்னால் போதும்.


S.kausalya
ஜூன் 23, 2025 09:52

இலவசங்கள், காசு,குவார்ட்டர் இவைகளை கொடுத்து மக்களிடம் பெறும் ஓட்டு போதும். ஓட்டுக்களால் தான் அரசு கட்டிலில் ஏறி அரசாட்சி செய்து கொள்ளை அடிக்க முடியும். மக்களின் வாழ்த்தைப் பெற வேண்டிய தேவையே இல்லையே.


V RAMASWAMY
ஜூன் 23, 2025 08:44

இவர்கள் வெறுப்புடன் அரசிலுக்காக விருப்பின்றி வாழ்த்து சொல்வதைவிட சொல்லாமலிருப்பதே மேல். அவர்களுக்கு யாரைக் கட்டிக்கொண்டு தலைமேல் தூக்கி வைத்துக்கொள்ளவேண்டும், பாராட்டவேண்டுமென்று தோன்றுகிறதோ, செய்யட்டும். ஒரு நாள் அவர்களின் தலைமேலிருக்கிறவர்களே கீழே போட்டு மிகித்தும்போது புரிந்தால் சரி.


VENKATASUBRAMANIAN
ஜூன் 23, 2025 08:09

இருந்தால் தானே


நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2025 07:03

அடப்போங்க அந்த குடும்பத்து டிவி சேனல்களில் நாலு சீரியலை போட்டுட்டு ஒரு அரசியல் நாடகம் போட்டு மத ரீதியா நாலு தலைவர்களை பேச வைத்தார்கள் என்றால் பன்றிகளை கூட நம்ம தமிழக மக்கள் தெரிந்து எடுப்பாங்க , இப்போ அதுதானே நடந்துள்ளது


சமீபத்திய செய்தி