உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு விபரங்கள் வழங்க அவகாசம்

எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு விபரங்கள் வழங்க அவகாசம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை அளிக்க, தமிழக அரசுக்கு ஏப்ரல் 2 வரை, சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.

இழுத்தடிக்கும் நிலை

நாடு முழுதும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் பல, சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு, உயர் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று, இழுத்தடிக்கும் நிலையும் உள்ளது. எனவே, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கஏதுவாக, அவற்றை கண்காணிக்கும்படி, உயர் நீதிமன்றங்களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

அரசுக்கு உத்தரவு

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தபோது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன; அந்த வழக்குகளின் விசாரணை நிலை என்ன என்பது குறித்த விபரங்களை, ஜனவரி 30க்குள் அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு முதல் பெஞ்ச் முன், நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் நிசார் அகமது, மக்கள் பிரதிநிதிகள் சிலருக்காக ஆஜராகி உள்ளதால், தன்னால் நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட இயலாது என்றார். அதனால், அவருக்குப் பதில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவனை, முதல் பெஞ்ச் நியமித்தது.

அவகாசம்

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன; இதர வழக்குகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதனால், அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டும்,'' என்றார். இதையடுத்து, விசாரணையை, ஏப்ரல் 2க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kuppan
பிப் 01, 2024 13:00

மக்களே பார்த்துக்கொள்ளுங்கள், இந்த லிஸ்ட்-ஐ ஒரு நாளில் கொடுக்கமுடியும் கோர்ட் கேட்கும்போது ஒரு மாதம் தவணை வாங்கினார்கள் இப்ப இரண்டு மாதம் தவணை கேட்கிறார்கள் இரண்டுமாதம் கழித்து ரிப்போர்ட் தயாரிக்கும் போது பேணா நிப் உடைந்துவிட்டது அமேசானில் ஆர்டர் செய்து இருக்கிறோம் இன்னும் மூன்று மாதம் கழித்து தான் வரும் என ஏதாவது கரணம் சொல்லி காலத்தை உருட்டுவார்கள்


V GOPALAN
பிப் 01, 2024 11:02

From April summer holidays will be d to court


duruvasar
பிப் 01, 2024 09:40

சேகரிக்க முடியாத எண்ணிக்கையிலா வழக்குகள் உள்ளன. அல்லது நீர்த்து போக வைத்ததால் எல்லாம் ஓடி கடலில் கலந்துவிட்டதா? அட்வகேட் ஜெனரல் ஏதோ கல்லூரியில் பிராஜெக்ட் சப்மிட் செய்ய நேரம் கேட்பதுபோல் கேட்கிறார்


GMM
பிப் 01, 2024 07:52

நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் எப்போதும் ஆவணப்படுத்த பட்டு தயார் நிலையில் இருக்கும். ஆளும் கட்சிக்கு பயந்து, நீதிமன்றம் கேட்டால் அதிகாரிகள் உடன் கொடுக்க மாட்டார்கள். இன்றய நவீன தொழில் நுட்ப த்தில் மறு நாள் கொடுக்க முடியும். அமைச்சர் கேட்டால், உடன் கொடுத்து விடுவர். இன்றய அரசு பணி நிலைமை இது தான்.


sankaranarayanan
பிப் 01, 2024 07:49

இந்த வழக்குகளின் விவரங்கள்கூட இல்லாத ஒரு உயர்நீதி மந்திரமா இங்கே இருக்கிறது அரசைகேட்டு அப்டேட் செய்யவேண்டுமா ஏன் அவர்களிடமே இந்த தகவல்கள் முழுவதும் கிடையாதா வேடிக்கையாக உள்ளதே


தமிழ் மைந்தன்
பிப் 01, 2024 06:58

தற்போது உள்ள அமைச்சர் பட்டியலை கொடுக்கலாம்


தமிழ் மைந்தன்
பிப் 01, 2024 06:57

ஆக ஏப்ரல் வரை கெடு


J.V. Iyer
பிப் 01, 2024 06:22

சீக்கிரம் இந்த கழக கொள்ளைக்காரர்களிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை