உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலி - துாத்துக்குடி ரயில்கள் ரத்து

திருநெல்வேலி - துாத்துக்குடி ரயில்கள் ரத்து

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, திருநெல்வேலி - துாத்துக்குடி ரயில்களின் சேவை, ஏப். 7, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:மதுரை ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி - துாத்துக்குடி காலை 7:35 மணி, துாத்துக்குடி - திருநெல்வேலி மாலை 6:25 மணி ரயில்களின் சேவை, ஏப். 7, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது துாத்துக்குடி - ஓக்ஹா வாரந்திர விரைவு ரயில், ஏப்.7, 14ம் தேதி, 1:55 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் பாலக்காடு - திருநெல்வேலி விரைவு ரயில், ஏப்.22ம் தேதி கொல்லம் வரை மட்டுமே இயக்கப்படும். திருநெல்வேலி - பாலக்காடு விரைவு ரயில், ஏப்.22ம் தேதி கொல்லத்தில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி