உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னைக்கு லீவு, விடுமுறை... புனித வெள்ளி வாழ்த்துக்கள்! கூட்டணி குறித்த கேள்விக்கு ஓ.பி.எஸ்., நழுவல்

இன்னைக்கு லீவு, விடுமுறை... புனித வெள்ளி வாழ்த்துக்கள்! கூட்டணி குறித்த கேள்விக்கு ஓ.பி.எஸ்., நழுவல்

கோவை:அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பற்றிய கேள்விக்கு, “இன்னைக்கு லீவு, விடுமுறை” என, பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த 12ல் கோவை வந்தார். கணபதி, சங்கனூர் ரோட்டில் உள்ள தனியார் இயற்கை நல மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை முடிந்து, ஊர் திரும்பினார்.கோவை வந்த தினத்தில், செய்தியாளர்கள் சந்திக்க முயன்றபோது, அவர் சந்திக்கவில்லை. இந்நிலையில், நேற்று இயற்கை நல மையத்தில் இருந்து புறப்பட்ட அவரை, செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, ''அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி பற்றி என்ன நினைக்கிறீர்கள், நீங்கள் கூட்டணியில் தொடர்கிறீர்களா,,?'' என தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.“இன்னைக்கு புனித வெள்ளி நாள். அதனால் விடுமுறை. இந்த நாளில் வேற எதுவும் பேசக்கூடாது,” எனக் கூறியவர், “வந்திருந்த அனைவருக்கும் நன்றி. புனித வெள்ளி வாழ்த்துகள்,” என்றபடியே, காரில் ஏறிச் சென்று விட்டார்.'அ.தி.மு.க.,வின் உட்கட்சி விவகாரத்தில், பா.ஜ., தலையிடாது' என, அமித் ஷா கூறிவிட்டார். இதனால், அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்டவர்கள் மீண்டும் இணையும் விவகாரம் அந்தரத்தில் உள்ளது. இதை எப்படி எதிர்கொள்வது என புரியாமல் பன்னீர்செல்வமும், தினகரனும் தடுமாறி வருகின்றனர். இதனாலேயே பன்னீர்செல்வம், தன் நிலை குறித்து எந்தத் தகவலும் கூறாமல் புறப்பட்டுச் சென்றதாக, அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை