உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுதாம்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுதாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (ஜூன் 01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (ஜூன் 01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஜூன் 02)

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில், வரும் ஜூன் 5ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Siva Subramaniam
ஜூன் 01, 2024 16:47

இதுவரை வந்த எல்லாமே வெறும் அரசியல் வானிலை அறிக்கை போன்றது. எல்லாம் அரசியல் mayam.


Selvam Subramanian
ஜூன் 01, 2024 14:53

எவ்வளவு மழை பெய்தாலும் சில நாட்களில் வறட்சி என அறிவிக்கப்படும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ