உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ சிறுமி மாயம், மாணவனுடன் திருமணம் செய்து கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்; உறவினர்கள் பள்ளியில் முற்றுகை

அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ சிறுமி மாயம், மாணவனுடன் திருமணம் செய்து கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்; உறவினர்கள் பள்ளியில் முற்றுகை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி மகள் .17, தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த 29 ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி சிறுமி அதிகாலையில் பார்த்த பொழுது மகளைக் காணவில்லை என பெற்றோர் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.தோகைமலை போலீசார் காணாமல் போன பள்ளி சிறுமியை மீட்டு பெற்றவுடன் ஒப்படைத்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் பள்ளி சீருடையில் சிறுமியை பள்ளி சிறுவன் திருமணம் செய்து கொண்ட படம் சமூக வலைதளங்களில் வைரலானது.தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் தோகைமலை காவல் நிலையத்தில் சிறுமியை திருமணம் செய்து கொண்ட மாணவன் மற்றும் உடந்தையாக இருந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சாலை மறியல் முயற்சி ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தையில் உறவினர்கள் திரும்பிச் சென்றனர்.இந்நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் பள்ளி சிறுமியின் உறவினர்கள் பெற்றோர்கள் தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் முற்றுகை செய்து பள்ளி வளாகத்தில் திருமணம் செய்த சிறுவன் மீதும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.பள்ளியில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொதுமக்கள் திரண்டதால் தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பந்தப்பட்ட பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தேகப்படும் நபர்கள் மீது புகார் மனு அளிக்க வேண்டும்.அப்பொழுது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவுறுத்தினர் .இதையடுத்து பள்ளி சிறுமியின் உறவினர்கள் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றனர்.அரசு பள்ளி வளாகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை சக வகுப்பு மாணவன் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறிய போது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவ மாணவி இருவரும் கடந்த 27 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்டம் கட்டிடம் அருகே சிறுமியை சிறுவன் தாலி கட்டியுள்ளதாக தெரிய வருகிறது. பள்ளி சிறுவர் சிறுமி திருமணம் செய்து கொண்ட சம்பந்தமாக இதற்கு உடந்தையாக இருந்த சக மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சிறுமியின் பெற்றோர்கள் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர் இது குறித்து உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
ஜூலை 02, 2024 16:31

'அலைகள் ஓய்வதில்லை' படத்தை பின் பற்றி, சக மாணவர்களே திருமணம் செய்து வைத்துள்ளனர் இனி பள்ளிக்குச் சென்ற மகன்/ புத்தகப் பையுடன் வருவாளோ, இல்லை கழுத்தில் தாலியுடன் வந்து நிற்ப்பாளோ என்று பெற்றவர்கள் கவலைப்பட வேண்டியிருக்கும் l ல்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 01, 2024 22:47

அட பாவிகளா , தமிழக கார்பொரேட் குடும்பத்தின் ஊடகங்களின் பரிணாமம்


sankaranarayanan
ஜூலை 01, 2024 20:32

இந்த பள்ளியில் அனைவருக்கும் கல்வி பயில வசதி உன்டு என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கல்வி ஸ்தாபனம் ஆனால் அது முற்றிலும் மாறிப்போய் அனைவருக்கும் கல்வி திட்டம் கட்டிடம் அருகே சிறுமியை சிறுவன் தாலி கட்டும்படியான இடமாக மாறிவிட்டது அந்தகோ என்ன இந்த விபரிதம்


Velan
ஜூலை 01, 2024 20:24

பள்ளிய எதுக்கு முற்றுகை இடனும். புள்ளய வழர்த்த முறை சரியில்ல இதுல போயி


மேலும் செய்திகள்







புதிய வீடியோ