உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறைந்தது தக்காளி விலை; ஒரு கிலோ ரூ.15க்கு விற்பனை

குறைந்தது தக்காளி விலை; ஒரு கிலோ ரூ.15க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ விலை அதிரடியாக சரிந்து 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்கள் முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.100 ஆக இருந்தது. வரத்து குறைவால் விலையேற்றம் இருந்ததாக வியாபாரிகள் கூறி இருந்தனர். இந் நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ.18 முதல் அதிகபட்சம் ரூ.25 வரை விற்பனையாகிறது. அதேநேரம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்கப்படுகிறது. அடுத்து வரக்கூடிய நாட்களில் தக்காளி விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றும் விலையேற்றம் இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை