உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்து; பயணிகள் அச்சம்

மதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்து; பயணிகள் அச்சம்

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பயணிகள் பீதியடைந்தனர்.தீபாவளி பண்டிகையைக் கொண்டாட, வேலை பார்க்கும் நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதனால் பண்டிகை கால சிறப்பு ரயில்களும் நிரம்பி வழிந்து வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8oh8b7pe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், மதுரை ரயில்நிலையம் அருகே சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற பயணிகள் ரயில் இன்று காலை திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் இன்ஜினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று தடம் புரண்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், தீபாவளியைக் கொண்டாட, சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பீதியடைந்தனர். பின்னர், ரயில் விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
அக் 31, 2024 18:36

நேரு காலத்து வண்டியாக்கும். இத்தனை நாள் உழைத்ததே அதிகம். இவிங்க தப்பு ஒண்ணும் இல்ல.


அப்பாவி
அக் 31, 2024 18:34

என்னது? சக்கரமே கழண்டு வந்திரிச்சா? சைக்கிள்ளே கூட நடந்ததில்லையே கோவாலு.


சாண்டில்யன்
அக் 31, 2024 15:00

நடந்தது வேறு திரைபோட்டு அதை மறைத்து திரிக்கப்பட்ட செய்தியை சொல்லியுள்ளார்கள் போட்டோவை வைத்து பார்த்தால் விசாரணை முடிவில் இன்ஜின் ஓட்டுநர் தண்டனை பெறுவார் ஆனால் அந்த செய்தி வெளியே வராதே


Ramesh Sargam
அக் 31, 2024 12:10

சமீபத்தில் நடக்கும் ரயில் விபத்துக்களை கூர்ந்து கவனித்தால் தண்டவாளங்கள், ரயில் பெட்டிகள், மற்ற விஷயங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லையோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. எல்லா விபத்துக்களும் சதி என்று முடிவு எடுப்பது சரியல்ல. பராமரிப்பு சரியின்மை, ஊழியர்கள் மெத்தனம், அதாவது சோம்பேறித்தனம் இவைகளும் ரயில் விபத்துக்களுக்கு காரணம். அவற்றை பெரிய பொறுப்பில் உள்ள ரயில் அதிகாரிகள் சரிசெய்யவேண்டும், மக்கள் நிம்மதியாக பயணிக்க வேண்டுமென்றால்...


Ganapathy
அக் 31, 2024 10:30

தீபாவளி அன்று விபத்து நடந்தால் இறப்பது ஹிந்துகளே. எனவே இது கல்லெறி கும்பல் வேலையாக இருக்கலாம்.


Apposthalan samlin
அக் 31, 2024 10:25

கடந்த பத்து வருசமாக பராமரிபே கிடையாது பராமரிக்கிறதற்கு spare parts இல்லை பத்து வருசமா குரூப் d ஆட்கள் எடுக்க வில்லை 5 லட்சம் காலி பணி இடம் இருக்கிறது ரயில்வே இல் நல்ல வருமானம் வருகிறது யாருக்கு கொடுக்கிறதோ ?காங் அரசாங்கத்தை உண்மையில் பாராட்ட வேண்டும் இந்த அளவுக்கு ரயில்வேயே மோசமாக கொண்டு வந்த perumai பிஜேபி அரசாங்கத்தை சேரும் .


ஆரூர் ரங்
அக் 31, 2024 10:54

இந்த பதிவை ரயில்வே நியமனங்களில் லஞ்ச ஊழல் செய்து ஜாமீனிலிருக்கும் காங்கிரஸ் கூட்டாளி லாலு வுக்கு அனுப்பவும்.


Ganapathy
அக் 31, 2024 11:20

ஒண்ணு உனக்கு எந்த எழவும் தெரியாம எழுதற இல்ல பொய்யா புளுகு...உன்னோட கான்+ ஆட்சில மக்கள் கொத்துகொத்தா செத்ததும் அதைக்கேட்டா திமிரா பதில் கொடுத்த கொடுமையையும் பாத்தவங்க நாங்க. எல்லாத்துலயும் கமிஷன். தாலிபான் கொடுத்தாலும் வாங்குவானுங்க. கரன்சி அடிக்குற மெசின அச்சோட பாகிஸ்தானுக்கு வித்த மொள்ளமாறிங்கதான் உன்னோட கான்+. காங்கிரஸோட ஆட்சில வந்தேபாரத் வந்தே இருக்காது. பேசா அந்த ஸ்பெயின் வண்டிய வாங்கி காசு பாத்திருக்கும் உன்னோட திருட்டு கான்+. அதுனாலதான் தூக்கி ஓரமா போட்டாச்சு உன்னோட ஊழல் கான்+யை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை