ரயில் முன்பதிவு மையம் 15ம் தேதி ஒரு ஷிப்ட்
சென்னை: ரயில்வே உத்தரவின்படி, தேசிய விடுமுறை மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில், 'ரயில் டிக்கெட்' முன்பதிவு மையங்கள், ஞாயிறு கால அட்டவணையை பின்பற்றி, ஒரு 'ஷிப்ட்' மட்டுமே செயல்படும். அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுதும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும், வரும் 15ம் தேதி, ஒரு 'ஷிப்ட்' மட்டுமே இயங்கும். காலை 8:00 மணி முதல், மதியம் 2:00 மணி மட்டுமே, டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.