உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேரடி ஒளிபரப்புக்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி

நேரடி ஒளிபரப்புக்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி

சென்னை: சட்டசபை நேரடி ஒளிபரப்பில், அ.தி.மு.க.,வினர் பேசுவது இருட்டடிப்பு செய்யப்படுவதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நேற்று குற்றஞ்சாட்டினார்.

இதற்கு, சபாநாயகர் அப்பாவு அளித்த விளக்கம்:

எதிர்க்கட்சி தலைவர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. முதல்வர் உத்தரவுப்படி, 2021 செப்டம்பர் முதல், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக, அதிகாரிகளை பல மாநிலங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, கேள்வி நேரத்தை மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.அதுமட்டுமின்றி, 110 விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்புகள் முழுமையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கவன ஈர்ப்பில் அமைச்சர்கள் பதில் இருந்தால், அதுவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விரைவில், சபை நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதற்காக, எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எம்.எல்.ஏ., ஒருவர் பேசும் வார்த்தைகள், சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி. இவ்வாறு சபாநாயகர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஏப் 09, 2025 11:49

அவையின் நுழைவாயிலில் மேக்கப் போட்டு விடலாம். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் பயிற்சியளிக்கலாம். இலவசமாக ஜால்ரா கொடுக்கலாம்.


vijai hindu
ஏப் 09, 2025 10:32

எப்படி ஏமாற்றுவது என்று சொல்லிக் கொடுக்கிறீர்களா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை