உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 9 டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 9 டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் முக்கிய நகரங்களைச் சேர்ந்த 9 டி.எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தாம்பரம், நாகை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

saravanankn1975 saravanankn1975
ஜூலை 20, 2024 21:34

திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்து தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருந்து வருகிறது. குறிப்பாக துணை காவல் கண்காணிப்பாளர் திரு செந்தில் அவர்கள் தொடர்ந்து பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவளித்து வருகிறார். இது குறித்து அனுப்பப்பட்ட புகார்கள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது. இதனால் பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டு வேதனை அடைந்து உள்ளனர் என்பது உண்மை. அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலவில் இருந்து வருகிறது. சுமார் நூறு கோடி ரூபாய் அளவில் கனிமங்கள் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டுள்ளது அது குறித்து எவ்வித நடவடிக்கை இல்லை. சமூக ஆர்வலர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை இதுதான் இன்றைய நிலை. மக்கள் பிரதிநிதிகள் தன் பை நிரப்பும் பணியை செய்கிறார்கள் தவிர மக்கள் நலனில் அக்கறை இல்லை இதுதான் இன்றைய நிலை


sundarsvpr
ஜூலை 20, 2024 18:10

மாற்றங்கள் செய்வது நிர்வாக நலனை முன்னிட்டு. சரிதான். யாருடைய நிர்வாக நலன்கள்? மக்களின்.. பொதுவாய் மாற்றங்கள் செய்வது நல்லது தான். அதனைமக்களிடம் கூற தயங்குவது ஏன் தயங்கவேண்டும். மாற்றப்பட்ட அதிகாரிகள் திருத்திக்கொள்ளலாம் அல்லவா பொதுமக்களுக்கு தெரியவேண்டாம் என்றால் மாற்றப்பட்ட அலுவலர்களுக்கு தெருவித்திட தயங்குவது ஏதாவது உள் நோக்கம் உள்ளது என்றுதான் நினைக்க தோன்றும். அதாவது வெளிப்படைத்தன்மை இல்லை.


Jysenn
ஜூலை 20, 2024 14:50

Ithu ellaam oru news?


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ