உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் மனு அளித்த போக்குவரத்து ஓய்வூதியர்கள்

வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் மனு அளித்த போக்குவரத்து ஓய்வூதியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி தமிழகம் முழுதும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில், நேற்று மனு அளிக்கப்பட்டது. சென்னை, கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட ஓய்வூதியர்கள், வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் இணைக்கப்பட்ட மனுவை அளித்தனர்.

வறுமை

இது குறித்து, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில தலைவர் கதிரேசன் கூறியதாவது:அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களாகிய நாங்கள், 2015ம் ஆண்டு நவ., மாதம் முதல் இன்று வரை அகவிலைப்படி உயர்வில்லாமல் குறைவான ஓய்வூதியம் பெற்று வறுமையில் வாழ்ந்து வருகிறோம். அகவிலைப்படி உயர்வை நிறுத்தியதை எதிர்த்து நீதிமன்றங்களில் சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இதில், அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பின்னரும் வழங்காமல், அரசு மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தி ஓய்வூதியர்களை வஞ்சித்து வருகிறது.

தேர்தல் புறக்கணிப்பு

இதனால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அனைவரும் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை. தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.எனவே, கலெக்டர் தலையிட்டு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுத்து, 92,000 ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு அரசிடம் பரிந்துரைக்க வேண்டும். தமிழகம் முழுதும் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் மனுவை அளித்துள்ளோம். 3000த்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்று உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி