மேலும் செய்திகள்
142 பேருக்கு ரூ.4 கோடி கடன் வழங்குகிறது தாட்கோ
03-Jan-2025
சென்னை : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய, முதல்வர் தலைமையில் மாநில மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.அரசு அறிக்கை:
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய, முதல்வர் தலைமையில், அத்துறை அமைச்சர், நிதி அமைச்சர், வனத்துறை அமைச்சர், எம்.பி., - - எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய, 'மாநில மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும். மாநில மன்றம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்டத்திற்கு திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல், செயல்படுத்துதல், கண்காணித்தல் போன்ற பணிகளை செய்யும். மாநில மன்றத்தின் முதல் கூட்டம், 20ம் தேதி, தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
03-Jan-2025