உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., விஜய்க்கு துளியும் தகுதியில்லை

த.வெ.க., விஜய்க்கு துளியும் தகுதியில்லை

தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என,மாறி மாறி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், இன்று புதிதாக அரசியல் செய்ய புறப்பட்டிருக்கும் நடிகர், தி.மு.க.,வுக்கு நான் தான் நேரடி போட்டி என்கிறார். அப்படியென்றால், அ.தி.மு.க.,வை ஓரங்கட்டி விட்டாரா? இதற்கெல்லால் அ.தி.மு.க.,விடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். தி.மு.க.,வோடு போட்டிபோட, நடிகர் விஜய்க்கு துளியும் தகுதி இல்லை. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருப்பதை, அக்கட்சி தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. சொந்த மாவட்டமான திருவாரூருக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் என நடிகர் விஜய் கேட்டுள்ளார். நான்கு ஆண்டு கால ஆட்சியில், மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகளுக்கும் சேர்த்து 1,862 கோடி ரூபாயக்கு பணிகள் நடந்துள்ளன. விபரம் அறிந்த அரசியல் தலைவர்கள் யாரேனும், நடிகர் விஜய்க்கு, இந்த தகவல்களை சொல்லக் கூடாதா? - நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை