உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., கட்சியினர் ரோடு ஷோ நடத்துவதில் சிக்கல்: பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுப்பு

பா.ஜ., கட்சியினர் ரோடு ஷோ நடத்துவதில் சிக்கல்: பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுப்பு

திருச்சியில், பா.ஜ., கட்சி சார்பில், ரோடு ஷோ நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தேசிய தலைவர் பங்கேற்கும் 'ரோடு ஷோ'வுக்கு, எப்படியும் அனுமதி பெற்று விட வேண்டும், என்ற முயற்சியில், பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.திருச்சியில், நாளை (ஏப். 7 ம் தேதி) பா.ஜ., கட்சியின் தேசிய தலைவர் நட்டா பங்கேற்கும் 'ரோடு ஷோ' நடத்த, திருச்சி மாவட்ட பா.ஜ., கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர்.காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை, 'ரோடு ஷோ' நடத்த, ஆன்லைன் வாயிலாக அனுமதி கேட்டிருந்த நிலையில், பாது காப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை காரணம் காட்டி, இன்று, போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப் பட்டது.இருப்பினும், தேசிய தலைவர் பங்கேற்கும் 'ரோடு ஷோ'வுக்கு, எப்படியும் அனுமதி பெற்று விட வேண்டும், என்ற முனைப்பில், பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறியதாவது:திருச்சியில், பா.ஜ., கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கும், 'ரோடு ஷோ'வுக்கு, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாலை தவவளன் அனுமதி மறுத்து விட்டார்.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினரும், அமைச்சர்களும் ஓட்டு கேட்கும் போது, பா.ஜ., தேசியத் தலைவர் மட்டும் ஓட்டு கேட்கக் கூடாதா? திருச்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், எங்களை நசுக்கப் பார்க்கின்றனர். அதிகாரிகள் அனுமதி மறுத்தாலும், திட்டமிட்டபடி 'ரோடு ஷோ' நடக்கும். பா.ஜ.,கட்சியினர் மிகுந்த எழுச்சியோடு பங்கேற்பார்கள், என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
ஏப் 06, 2024 19:25

இதில் தேர்தல் கமிஷன் தலையிட்டு எல்லா கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளுக்கு தடை விதிப்பதை தேர்தல் கமிஷன் தலையிட்டு அவர்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்


Godfather_Senior
ஏப் 06, 2024 18:40

திமுக விற்கு நன்றி இந்த கூறுகெட்ட வேலைகளால் பாஜக இன்னும் பாலம் பெரும் என்பதோடு மேலும் வெற்றி பெரும் என்பது கண்கூடு எவ்வளவுக்கெவ்வளவு அடக்குமுறைகளை திமுக கையாளுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு திமுக பெரும் தோல்விகளை சந்திக்க நேரிடும் ஜெய் ஸ்ரீராம் , ஜெய் பாரத்


krishnamurthy
ஏப் 06, 2024 18:54

பி ஜே பி மேலும் பலம் பெரும்


J.V. Iyer
ஏப் 06, 2024 18:27

காவல்துறைக்கு நல்ல காலமில்லை திருடர்களுடன் சேர்ந்து கும்மாளமிடுகிறார்கள் இன்னும் எத்தனி நாட்கள்?


balu
ஏப் 06, 2024 17:48

It clearly shows dmk government failure in law and order. If people love dmk government no one stop election victory. Why they giving options for peoples to discuss this subject


Lion Drsekar
ஏப் 06, 2024 15:14

நாங்கள் யார்? மக்களே இல்லாத இடத்துக்கு அனுப்பி தேர்தல் பிரச்சாரம் செய்ய வைப்போம் அடைப்போம் வாக்காளர்கள் அனைவரையுமே புட்டியில் அடைப்போம் எதிரிகள் வரும் போது ஊரில் யாருமே இருக்கமாட்டார்கள் அடைப்போம் அப்படியெல்லாம் நாங்கள் தேர்தல் காலத்தை நடத்திவரும் நிலையில் ரோடு ஷோ அடைப்போம் வந்தே மாதரம்


Kasimani Baskaran
ஏப் 06, 2024 14:25

மாடல் அரசு மாநில தேர்தல் ஆணையத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவது போலத்தெரிகிறது பாதுகாப்பு என்று காரணம் சொல்வது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருப்பதை இவர்களே ஒத்துக்கொள்வது போல இருக்கிறது


kannan sundaresan
ஏப் 06, 2024 13:45

கோர்ட்டுக்கு போய்தான் அனுமதி வாங்கனுமா?


duruvasar
ஏப் 06, 2024 13:35

அடேங்கப்பா பயங்கர ஸ்டிரிக்டா இருக்காங்களே ? நீலகிரி தொகுதியில் ஆரம்பித்த அந்த கெடுபுடி அப்படியே ஸ்டிரிக்டாக செயல்படுத்துவது


தமிழ்வேள்
ஏப் 06, 2024 13:13

இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை வீரர்களின் அடி உதை எப்படி இருக்கும் என்று திமுக கும்பலுக்கு காட்டுவது தற்போது மிகவும் அவசியமாகும் இவர்கள் தனிநாடு என்று நினைத்து கொண்டு ஆட்டம் போடுகிறார் கள் மிசா கால கொடுமைகள் மறந்து போயிற்று இவர்களுக்கு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை