உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல், ஆட்டோ பிரசாரம், அப்புறம் நோட்டீஸ்! தொண்டர்களுக்கு த.வெ.க. திடீர் மெசேஜ்

வாக்காளர் பட்டியல், ஆட்டோ பிரசாரம், அப்புறம் நோட்டீஸ்! தொண்டர்களுக்கு த.வெ.க. திடீர் மெசேஜ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக த.வெ.க., தொண்டர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சி அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:இந்தியத் தேர்தல் ஆணையம், 01.01.2025 என்பதைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.இம்மாதத்தில் 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய தேதிகளில், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. புதிதாகப் பெயர் சேர்க்க, சில ஆவணங்களைச் சான்றாக இணைக்க வேண்டும். மேலும் அங்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை உடனுக்குடன் நிரப்பி, முகாம்களில் உள்ள அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நம் கழகம் சார்பாக, தங்கள் மாவட்டத் தொகுதிகளில் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேற்குறிப்பிட்ட இரண்டு வாரங்களிலும் (நான்கு முகாம் நாட்களில்) மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் மேற்பார்வையில், ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஏழு தற்காலிகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை ஈடுபடுத்திக்கொண்டு இம்முகாம் தொடர்பாக ஆட்டோ பிரச்சாரம் செய்வதுடன் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து இப்பணியில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sridhar
நவ 11, 2024 20:35

திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில குவியக்கூடாது என்பதற்காக லயோலா கும்பல் இவரை இறக்கிவிட்டார்கள் என்றும் ஒரு செய்தி உண்டு. உண்மையாக இருக்கலாம் .


sridhar
நவ 11, 2024 20:32

New broom sweeps well. Do readers understand what I am alluding to.


Sekar Times
நவ 11, 2024 19:03

பயனற்ற பாதையில் பயணம் தொடங்கி விட்டார் விஜய் அவர்கள்.விதி வலியது.


mindum vasantham
நவ 11, 2024 18:35

மாஸ் பூர்வ குடி வீரன்


KRISHNAN R
நவ 11, 2024 17:48

அதே மாவு...எப்படியும்... ஒரு குரூப் ஸ்டடி.. வே லை...உண்டு.


Ms Mahadevan Mahadevan
நவ 11, 2024 17:46

இதுவேல்லாம் சரிதன். தனித்து போட்டி இட்டு வாக்கு சதவீதம் என்று காட்டு. அடுத்து கொள்கை என்று பழைய உடான்ஸ் எல்லாவற்றையும் தூர போட்டுவிட்டு உண்மையான சமூகநீதி, உண்மையான மதச்சார்பின்மை அதாவது எந்த மதத்திற்கும் ஆதரவோ எதிர்ப் போ இல்லாமை மது விலக்கு ரவுடீசத்திர்க்கு எதிர்ப்பு அரசு கல்வி நிறுவனங்களில் எல்லோருக்கும் தரமான விரும்பும் இலவச கல்வி , கல்வி வியாபாரம் ஆவதை த்டுப்பென் என்று கூறி வாக்கு சேகரித்து வெற்றிபெற உழைப்போம் என்று தொண்டர்களுக்கு அறிவித்து விடுங்கள். மக்கள் ஆதரவு பெருகும்


KRISHNAN R
நவ 11, 2024 20:50

வாய்பில்லை. கட்சியினர்... மக்களை திசைதிருப்ப.. ஒருவரை ஒருவர் திட்டிகொள் வர் அல்லது யார் எதிர் குரல் கொடுக்க முடியாமல்.. உள்ள ஒரு தரப்பை திட்டுவர். உண்மை நீதி சம வாய்ப்பு வாய்பில்லை


Rajarajan
நவ 11, 2024 17:39

இப்போ என்ன சொல்ல வரீங்க ?? இதெல்லாம் நீங்க சொல்லித்தான், நாட்டுல நடக்குதுன்னு நெனச்சிடீங்களா ?? சரிதான். இப்போவே பதவி வந்தா போல, ஆக்க்ஷன் ஆரம்பிச்சிடீங்க. இது மத்திய அரசு வேலை சார். எதுக்கும் நல்ல வைத்தியரா போய் பாருங்க. ஆரம்பத்துலயே சீக்கிரம் குணப்படுத்திடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை