உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டில் மதில் சுவர் இடிந்து சிறுமிகள் இருவர் பலி

வீட்டில் மதில் சுவர் இடிந்து சிறுமிகள் இருவர் பலி

சிவகாசி: சிவகாசி கொங்கலாபுரத்தில் வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து பெண் போலீஸ் ராஜேஸ்வரியின் மகள் கமலிகா, தங்கை மகள் ரிஷிகா உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி-ராஜேஸ்வரி (போலீஸ்) தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகள் கமலிகா,9, வீட்டின் கேட் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, கமலிகாவின் அம்மா ராஜேஸ்வரியின் தங்கை தனலட்சுமியின் 4 வயது மகள் ரிஷிகாவும் விளையாடி உள்ளார்.திடீரென மதில் சுவர் இடிந்து விழுந்ததில், கமலிகா, ரிஷிகா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டின் கேட் சுவர் சேதம் அடைந்து இருந்ததால் இடிந்து விழுந்ததாக தெரிகிறது. சுவர் இடிந்து சிறுமிகள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை