உதயநிதி அடம்; மடைமாற்றம் செய்யும் தி.மு.க.,
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: ''இல்லாத பிரச்னையை பூதாகரமாக்கி தி.மு.க.,வினர் ஈரை பேனாக்கி வருகின்றனர்,'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர் ஸ்டாலின் நியாயமான தொகுதி மறுவரையறை குறித்து பேசுகிறார். முதலில், டாஸ்மாக் கொள்ளை, போதைப்பொருள் மாபியா, சட்டவிரோத மதுபானம், ரவுடியிசம், அமைச்சர்களின் ஊழல் குறித்து அவர் பேசட்டும். அவரின் இதுபோன்ற வழக்கமான அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை. அமைச்சர் ரகுபதி தொடர்ந்து வார்த்தைகளால் வாந்தி எடுப்பதை மக்கள் பொருட்படுத்த தயாராக இல்லை. மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவைத் தொடர்ந்து, துணைமுதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் என கூறப்பட்டது. பொதுக்குழுவில், மன்னராட்சிக்கு வழி வகுக்க உதயநிதிக்கு துணை நிற்போம் என்று தீர்மானம் போட்டார்கள். அதில் திருப்தி அடையாத உதயநிதி, 'துணை பொதுச்செயலர் பதவியை உடனடியாக அறிவிக்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வருகின்றன. இதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காகத்தான் இல்லாத பிரச்னையை பூதாகரமாக்கி தி.மு.க.,வினர் ஈரை பேனாக்கி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.