வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓ, இவன்தான் புதிதாக அந்தக் குடும்பத்துக்கு சேர்ந்துள்ள ஆளா?
மதுரை: ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான், தி.மு.க., வெற்றியின் ரகசியம் என துணை முதல்வர் உதயநிதி, உண்மையை சொல்லியிருக்கிறார்,'' என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறினார். மதுரையில் அவர் அளித்த பேட்டி: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தனிப்பட்ட கோபமில்லை. தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு பழனிசாமி என்ற ஒற்றை மனிதருக்கு காவடி துாக்குபவர்களை, ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது. முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும் வரை, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனி தான். பழனிசாமி தான், தி.மு.க.,வின் வெற்றி ரகசியம் என துணை முதல்வர் உதயநிதி உண்மையை கூறி இருக்கிறார். இதை, அ.தி.மு.க.,வினர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஓ, இவன்தான் புதிதாக அந்தக் குடும்பத்துக்கு சேர்ந்துள்ள ஆளா?