உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வர் பதவி அல்ல; பொறுப்பு என்கிறார் உதயநிதி!

துணை முதல்வர் பதவி அல்ல; பொறுப்பு என்கிறார் உதயநிதி!

சென்னை: தமிழக துணை முதல்வராக இன்று பொறுப்பேற்ற உதயநிதி, 'துணை முதல்வர் என்பது பதவி அல்ல, பொறுப்பு' என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உதயநிதி பதவியேற்பு ஆதரவு தெரிவித்து ஒரே குரலில் பேசி வருகின்றனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதற்கும், செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமனம் செய்வதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து பேசலாம்' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை தீவுத்திடலில் போதையில்லா தமிழகம் என்ற மாரத்தான் போட்டியை, மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடத்தில் எல்லாம் பொதுமக்கள் உதயநிதிக்கு எப்பொழுது துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற கோரிக்கை விடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

நல்ல நாள்

பொதுமக்களின் கோரிக்கை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திராவிட தொண்டர்களின் எதிர்பார்ப்பை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி நிறைந்த, பெருமை கொள்கிற, நல்ல நாள். உதயநிதி துணை முதல்வர் ஆவதற்கு முன்பாகவே, இளைஞர்கள் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத்துறையில் தமிழகத்தை தலைமை இடமாக மாற்றி தந்திருக்கிறார். உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் பல்வேறு துறைகளில் பல்வேறு தரப்பினர் பெருமை அடைந்து இருக்கிறார்கள். பார்முலா கார் பந்தயமாக இருந்தாலும் சரி, முதல்வரின் கோப்பை என்ற போட்டியாக இருந்தாலும் சரி 2 கோடி இளைஞர்கள் சமுதாய சக்தியின், விழிப்புணர்வுக்காக விளையாட்டு துறையை உதயநிதி மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். 100 இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

வாரிசு அரசியல்

வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து பேசலாம். விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியலில் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும். வாரிசு இல்லாதவர்கள் இது குறித்து முன்னெடுத்து பேசுவது தான் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

விமர்சிப்பவர்களுக்கு நன்றி

இன்று காலை சென்னை, மெரினாவில் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்களுக்காக உழைப்பேன். மூத்த அமைச்சர்கள் வழிகாட்டுதலுடன் பணி செய்வேன். எனக்கு வாழ்த்து கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி. விமர்சிப்பவர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுவேன். என் பணியில் தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்வேன். எனது பணியின் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன். துணை முதல்வர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன். திமுக இளைஞரணி பொறுப்பு வழங்கப்பட்ட போதும் என்னை விமர்சித்தார்கள். விமர்சனங்களை வரவேற்கிறேன். இவ்வாறு உதயநிதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 161 )

G.Kirubakaran
அக் 29, 2024 13:35

பதவி அல்ல, பொறுப்பு என்றால் சம்பளம் வாங்க கூடாது, பதவியின் சலுகைகளை விட்டு விட வேண்டும், சொந்த வீட்டில் இருக்க வேண்டும்


s t rajan
அக் 29, 2024 09:45

அரசியலை, அமைச்சகப் பதவியை குலத்தொழிலாக நடத்துபவர்கள் ஸனாதனத்தை ஒழிக்கப் போகிறார்களாம். நம்பி ஏமாறுங்கள், தமிழர்களே


Palanisamy T
அக் 22, 2024 20:28

இது பொறுப்பா அல்லது துணைமுதல்வர் பதவி அபகரிப்பாயென்று தெரியவில்லை. ஏனென்றால் இந்தப் பதவியிருந்தால்தான் நாளை முதலமைச்சர் நாற்காலியில் சுலபமாக வந்து அமரலாம். அப்போது அதையும் பொறுப்பென்று சொல்லப் போகின்றீர்களா? ரொம்ப நல்ல நகைச்சுவை போங்க


Ahamed Rafiq
அக் 18, 2024 04:30

நடிகர் சங்கம், அதிமுக, திமுக. இது மூன்றும் என் உதவி இல்லாமல் வெற்றி பெற முடியாது...


prahlad krishnamurthy
அக் 14, 2024 01:17

நோ ரெஸ்பான்சிபிலிட்டி விதோட் டெலிவெரிங் யுவர் டூட்டி கடமை கண்ணியம் கட்டுப்பாடு


kumarkv
அக் 09, 2024 23:36

விளக்கெண்ணெய் அட்வெர்ட்டிஸ்ட்மென்ட்


நிக்கோல்தாம்சன்
அக் 06, 2024 17:10

ஸ்டாலின் வாயி கரெக்ட்டா சொல்லுது அவரது மனதை


Lion Drsekar
அக் 04, 2024 06:44

பாராட்டுக்கள் பல பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவித்தால் பொறுப்பு என்பதற்கு உதாரணமாக இருக்கும்


Thanjavur K. Mani
அக் 03, 2024 13:13

பொறுப்பு வந்துவிட்டது என்று கூறுகிறாரே, இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. இத்தனை நாளாக பொறுப்பபில்லா அமைச்சராக இருந்தாரா | என்கிற சந்தேகம் வருகிறது. கே. மணி. சென்னை 03.10.2024-Thu. 13.13 hrs.


Raj Kamal
அக் 16, 2024 16:46

கூடுதல் பொறுப்பு என்று அர்த்தம். ஆடு சரி மண்டையில ஏதாவது இருந்தாதானே அது கமெண்டுல வரும்.


Anu Sekhar
அக் 02, 2024 21:20

பொறுப்பு வந்துவிட்டது என்றால் ஊழல் இல்லா அரசை கொடுங்க. அப்புறம் பேசலாம்.


புதிய வீடியோ