உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை; சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்

கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை; சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்

சென்னை: கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற புதிய மசோதாவை சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்தார்.சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி, கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு துன்புறுத்துவதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் சட்ட முன் வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது;பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கூலித் தொழிலாளிள், கட்டத் தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகி தாங்க முடியாத கடன் சுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.இதுபோன்ற நேரங்களில் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் இது போன்றவர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை பின்பற்றுகிறார்கள். அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.இதுபோன்ற எண்ணங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.இந்த சட்டத்திருத்தத்தின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களைது சொத்துகளை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இச்சட்ட முன்வடிவின்படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஜாமினில் வெளிவர முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Bhaskaran
மே 01, 2025 04:29

இனி ஒருத்தரும் கடன் தர மாட்டார்


Sarashan
ஏப் 27, 2025 15:26

கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை. சரி. கட்டாய வசூலில் ஈடுபட்டால்


Mani
ஏப் 27, 2025 05:40

அதே போன்று சினிமாக்காரர்களை கட்டாயமாக மிரட்டுபவர்களையும் சிறையில் பிடித்துத் தள்ள சட்டம் கொண்டு வர முடியுமா? சிலர் உலகநாயகனையே மிரட்டி சினிமா விநியோகம் செய்கிறார்கள். பகலில் டார்ச் லைட் அடித்துக் கொண்டு, டிவியை உடைத்துக் கொண்டு திரிந்த ஒருவரை மிரட்டி வாழ்நாள் கொத்தடிமையாக மாற்றி விட்டார்கள். அதுனால அதுக்கு சட்டம் கொண்டு வந்தால் நல்லது.


JaiRam
ஏப் 27, 2025 01:02

இது மீகவூம் வரவேற்க வேண்டிய சட்டம் முதுகெலும்பில்லாத ஆர் பி ஐ செய்ய வேண்டிய வேலை இவர் எதை செய்தல் கட்டாயம் இந்தியாவில் ஒரு முன்னுதாரணமாக திகழ்வர்


Venkataraman
ஏப் 26, 2025 23:46

டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டருக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்று 5000 கோடி கொள்ளையடிக்கிறார்களே அவர்கள் மேல் நடவடிக்கை இல்லையா?


Sivagiri
ஏப் 26, 2025 20:07

இதெல்லாம் தீயமுகா - உ-பிஸ் களுக்கு மட்டுமே பொருந்தும் , , , மற்றவர்களுக்கெல்லாம் பழைய சட்டங்கள் பாயும் . . .


Kuru
ஏப் 26, 2025 19:51

கொடுத்த கடனை திருப்பி பல முறை கேட்பது தவறு என்று ஒரு சட்டம் போடுங்கள். கொடுத்த பணத்தை 5 முறை ஒரு வார கால இடைவெளி விட்டு திருப்பி கேட்கலாம். கொடுக்கவில்லை என்றால் அதற்குமேல் கேட்பது குற்றம். 5 முறை கேட்டு கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தைதான் அனுகவும். நீங்கள் சாவதற்குள் தீர்ப்பு வந்தால் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி.


சிவன்
ஏப் 26, 2025 19:51

இங்கு அடையாறு / பெசன்ட் நகர் பக்கம் வாருங்கள். மின் வாரிய AD, புதிய மின் இணைப்பு வழங்க, கறாராக ₹ 1 லட்சம், ஒரு சர்வீசிற்கு லஞ்சம் கேட்கிறார். இந்த ஏரியா கவுன்சிலர் அண்ணனோ, இணைப்பு வழங்க ரோட் கட்டிங் அனுமதி வழங்க ஒரு Flat ற்கு ₹ 30,000 லஞ்சம் கேட்கிறார். இவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் கிடையாதா?


rama adhavan
ஏப் 26, 2025 17:55

மாநாடு, திறப்பு விழா, கட்டிங் அது, இது என்று ஆளும் கட்சியினர் செய்யும் கட்டாய வசுலுக்கு ஓரு 5 வருடம் கடுங்காவல் சிறை என சட்டம் கொண்டு வாருங்கள் அமைச்சரே.


மணி
ஏப் 26, 2025 16:57

ஜெ. ஆட்சியில் கந்துவட்டி தடை சட்டம்னு சிறப்பாக செயல்பட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை