உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணைய செயலியில் உடுமலை தொகுதி மாயம்

ஆணைய செயலியில் உடுமலை தொகுதி மாயம்

கோவை: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான சேவைகளுக்காக, 'இ.சி.ஐ.நெட்' என்ற செயலி, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே தேர்தல் தொடர்பாக பயன்பாட்டில் இருந்த, 40 மொபைல் செயலிகள், இணைய சேவைகளை ஒரே தளத்தில் இணைத்து வழங்கும் வகையில், இ.சி.ஐ.நெட் செயலி தயாராகியுள்ளது. இதில், வாக்காளர் அடையாள அட்டை எண் இல்லாமல், மாநிலம், மாவட்டம், சட்டசபை தொகுதி விபரங்கள் உள்ளிட்ட தகவலை பெறலாம். இந்த வசதியை பயன்படுத்தி, உடுமலை சட்டசபை தொகுதி (125) குறித்த விபரங்களை உள்ளிடுவதற்கு தேடினால், திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளன. உடுமலை தொகுதியே இல்லை. கோவை மாவட்டத்திலும் இல்லை. வாக்காளர் பட்டியலில் நமது பெயரை தேடுவதற்கான, 'சர்ச் யுவர் நேம் இன் வோட்டர்ஸ் லிஸ்ட்' வசதியில், விபரங்களை உள்ளிட்டு தேடும் போதும், உடுமலை சட்டசபை தொகுதியைக் காணவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை