உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வேக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு: தமிழக திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி

ரயில்வேக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு: தமிழக திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ மத்திய பட்ஜெட்டில் 2024 - 25ம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது'' என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேத்துறையில் அனைத்தையும் பிரதமர் மோடி மாற்றி அமைத்து உள்ளார். தற்போது, ரயில்வேயை நவீனமயமாக்குவதில் முதலீடு செய்வது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், ரயில்வேக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், ரயில் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கேரளாவுக்கு ரூ,2,744 கோடியும், ஹிமாச்சல பிரதேசத்திற்கு ரூ.2,681 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ரயில்வே பாதையை மின்மயமாக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. மாநிலத்தில் ரயில்வே வளர்ச்சி பணிகளுக்காக ரூ.2,861 கோடி ஒதுக்கி உள்ளோம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ