உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பென்ஷன் குறித்து ஆராய குழு அமைப்பு: போராட்டத்தை கைவிட சங்கங்கள் மறுப்பு

பென்ஷன் குறித்து ஆராய குழு அமைப்பு: போராட்டத்தை கைவிட சங்கங்கள் மறுப்பு

சென்னை: ஓய்வூதியம் குறித்து ஆராய அரசு குழு அமைத்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என, 2021 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை; பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே அமலில் உள்ளது.

9 மாதம் அவகாசம்

இந்நிலையில், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்து, அதில் சிறந்ததை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய, ஒன்பது மாதங்கள் வரை இக்குழுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தாமல், குழு அமைத்ததற்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, வரும் 14ம் தேதி, அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.இதை தொடர்ந்து, மாநிலம் முழுதும் வரும் 25ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்திற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆய்வு குழு அமைத்ததால், போராட்டம் ரத்து செய்யப்படும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்த, ஜாக்டோ - ஜியோ அமைப்பு, தமிழக தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தயாராகி வருகின்றன.

தள்ளிப்போடும் முயற்சி

தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் செல்லையா கூறியதாவது:ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைப்பது, அந்த திட்டத்தை தள்ளிப்போடும் முயற்சி. ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கும் செய்தி புதிதல்ல. ஏற்கனவே, 2015ல் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து, அறிக்கை பெற்றார். அதைத் தொடர்ந்து, 2017ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை, அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டது; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், 'ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்' என்றார். அதை, தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்தார். இந்த குழு அமைக்கும் விவகாரமே, திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து தப்பிப்பது அல்லது தள்ளி போடுவதற்காகத் தான். அதனால், இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.2026ல் எதிர்க்கட்சி தலைவர் பதவி பரிசுஅரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கைமதுரை, பிப். 7-''தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், 2026 தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிப்போம்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி எச்சரித்துள்ளார்.இது குறித்து, மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது:பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராய, மூன்று பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க., அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இக்குழு விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஒன்பது மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.குழு அமைப்பது என்பது, 2021 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.,வின் வாக்குறுதி எண் 309க்கு எதிரானது. தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தாமல், குழு அமைத்து அரசு ஊழியர்களை ஏமாற்றலாம் என்ற முதல்வர் ஸ்டாலின் திட்டம் பலிக்காது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகனின் தொகுதி உட்பட 17 தொகுதிகளில் தி.மு.க.,வின் வெற்றியை தீர்மானித்தது, அரசு ஊழியர்களின் ஓட்டுகள் தான்.ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர்கள் வரலாற்றில் துாக்கி எறியப்படுவர் என்பதை முதல்வர் மறக்க வேண்டாம். குழு அமைத்து, அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் நடவடிக்கையை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், கொள்கை ரீதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி, பிப்., 25ல் தமிழகம் முழுதும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.அரசு ஊழியர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தொடரும் பட்சத்தில், 2026 சட்டசபை தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிப்பதை யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Yasararafath
பிப் 07, 2025 11:27

அரசு ஊழியர்களுக்கு எதற்கு பென்ஷன்.


Paramasivam
பிப் 07, 2025 15:55

எம்எல்ஏ எம்பிகளுக்கு எதற்கு பென்சன்? அவர்கள் 2.5 வருடம் பணி செய்தாலே பென்சன் பெறமுடிகிறது. ஆனால் அரசு ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்தாலும் பெர்சனல் இல்லை என்பது எப்படி? குறிப்பு : ஒருவர் எம்எல்ஏ மற்றும் எம்பியாக இருந்திருந்தால் இரண்டு பென்சன் கிடைக்கிறது. இது எப்படி????


Kalibathullah
பிப் 07, 2025 11:24

2004 க்கு பின் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஓய்வு காலத்திற்கு பின் பென்சன் இல்லை.


rameshkumar natarajan
பிப் 07, 2025 23:06

They can go for NPS sir.


rameshkumar natarajan
பிப் 07, 2025 10:56

Government should consider reducing the benefits given to government employees and divert that fund to the poor people. Why pension? Contributory pension scheme should continue. When lot of people are are without job, why pension?


Udayasuryan
பிப் 07, 2025 10:55

இந்த மக்களுக்கு தெரியவில்லை அரசியலே ஒரு ஏமாற்று வேலை வருகின்ற தேர்தலில் வாக்களித்தால்செய்வோம் என கூறுவார்கள் பிறகு ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என பார்ப்பார்கள் இது சகஜம்தானே


rameshkumar natarajan
பிப் 07, 2025 10:04

First the government employees should think, what they get and what they work. Take in the case of private sector, how one has to slog to get this kind of money. How dare these people can threaten the govenment? Stalin should give the same traetment what jaya gave to these people. So, selfish people.


Amar Akbar Antony
பிப் 07, 2025 09:56

ஓய்வூதியம் அரசு சம்பளம் வாங்கிவிட்டு இரண்டு வீடுகள் பங்களாக்கள் கட்டி வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் பனிக்காலத்தில் கிம்பளம் தேர்தல் சமயத்தில் கவனிப்பு மற்ற டி எ டூர் அலவன்சுகள் என்று ஏக காலத்தில் அனுபவித்துவிட்டு இதில் ஈ பி எப் வேரு பின்னர் ஓய்வு அன்று பணிக்கொடை சற்றே சிந்தியுங்கள் மற்ற மனிதர்கள் தனியார் சுய தொழில் செய்வோர் இவர்களின் துன்பங்களை உங்களால் என்ன வருமானம் அரசுக்கு அதற்கும் போனஸ் வாங்குகிறீர்கள் அரசியல்வாதியை விட நீங்கள் அடிக்கும் கொள்ளை கூட்டம் அதிகம் எத்துணை ஆசிரியர்கள் இரு பங்களாக்கள் இடம் ஹாக்கிங் வைத்துளீர்கள் கொடுமை என்னவென்றால் மகன்கள் பிள்ளைகள் இருப்பார்கள் மேற்படிப்பு செய்து இலட்சங்கள் சம்பாதித்தாலும் ஆயிரக்கணக்கில் வாடகை வந்தாலும் ஓய்வூதியம் வாங்குபவர் இறந்துவிட்டால் அவர் துணைவி அல்லது கணவருக்கு தொடர்கிறதே அந்த ஓஓஓய்வூதியம் கொடுமையடா சாமி மனசாட்சி இல்லாத கொடுங்கோலர்கள் நீங்கள் உங்களுக்கு மற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எப்படி ஈ பி எப் ஓ அதுமட்டுமே கொடுக்கப்படவேண்டும் என் கண்ணால் பார்த்ததை அப்படி ஓய்வூதியம் பெருகின்றவர்களை பார்த்து அவர்களின் அளவில்லா செல்வத்தை பார்த்து அவர்கள் வாங்கும் ஓஓஓஓய்வூதியதை பார்த்து தான் இப்படி எழுதுகிறேன் இல்லையென்று மனசாட்சி உண்டென்றால் உங்களால் மறுக்கமுடியுமா இல்லை தனியார் நிறுவனங்களில் பணியெடுப்போர் சுயதொழில் செய்வோர் இவர்களின் கோரிக்கையை ஆதரிப்பீர்களா?


SULAIMANBATCHA
பிப் 07, 2025 08:35

பழைய ஓய்வூதியம் வேண்டும் குழுவை இரத்துசெய்யவேண்டும்.


SULAIMANBATCHA
பிப் 07, 2025 08:32

உண்மையிலேயே அரசு ஊழியர்கள் குடும்பம் மற்றும் உறவுகள் நிச்சயமாக இந்த மறை நம்முடைய நம்பிக்கையான திமுக அரசை எதிர்வரிசையில் அமர வைப்பார்கள் அதற்குள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை பழைய ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.


Marimuthu
பிப் 07, 2025 08:15

2026 சட்டமன்ற தேர்தலில் இதே வாக்குறுதி மீண்டும் அறிவிக்கப்படும் வருத்தப்பட வேண்டாம்


Amar Akbar Antony
பிப் 07, 2025 07:59

மிரட்டல் உருட்டல் எல்லாம் இந்த அரச ஊழல்வாதிகளுக்கு கைவந்தக்கலை ஒரு பத்து சதவிகித ஊழியர்களை தவிர மற்ற எல்லோருமே உயர்ந்த பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர். இவர்களுக்கு அரசு ஏன் ஓய்வூதியம் தரவேண்டும் ஈ பி எப் இருக்கிறதே அது போதாத மற்ற மனிதர்கள் பிழைக்கிறார்களே உங்களுக்கு எத்துணை வகையில் வருமானம் வருகிறது உங்களுக்கு படி அளிப்பதால் உங்கள் படி ஏற்றும்போது விலைவாசி ஏறுகிறது மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் மாத சம்பளத்தை படி கூட்டமுடியாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெரிந்தே கொள்ளையடிக்க திட்டமிடுகிறீர்களே உங்களால் அரசிற்கு என்ன இலாபம் மக்களுக்குத்தான் என்ன லாபமா இலஞ்ச பேர்வழிகள் இதில் பதினேழு தொகுதிகள் உங்கள் வசமென்று மார்தட்டுகிறீர்கள் கேவலமாக இல்லையா இறைவன் உங்களுக்கு நிம்மதி தரமாட்டான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை