உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதிவு செய்யாத மருத்துவமனைகள்: இயக்ககம் எச்சரிக்கை

பதிவு செய்யாத மருத்துவமனைகள்: இயக்ககம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ், மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககம் செயல்படுகிறது. இந்த இயக்ககம், மருத்துவமனைகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. மருத்துவ நிறுவனங்களை பதிவு செய்யவும், அவற்றின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் திருத்த சட்டம் - 1997ம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், நோயறிதல் மையங்கள் போன்றவை பதிவு செய்யப்படுவது அவசியம். ஆயுதப்படை நடத்தும் மருத்துவ நிறுவனங்களுக்கு மட்டும், இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ நிறுவனங்கள், www.tncea.dmrhs.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக, பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது. அத்துடன், பதிவு செய்யாத நிறுவனங்கள், 2026 ஜூன் மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்; அவகாசம் நீட்டிக்கப்படாது. போலி டாக்டர்கள் குறித்து, tncea.gmail.comஎன்ற இ - மெயில் முகவரி வாயிலாகவும், 104 என்ற இலவச தொடர்பு எண் மூலமும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D Natarajan
நவ 10, 2025 08:33

எச்சரிக்கை மட்டும் தான் . பெட்டி வந்தவுடன் எல்லாம் சரியாகி விடும்.


அப்பாவி
நவ 10, 2025 06:10

இத்தனை நாளா என்ன பண்ணிட்டிருந்தீங்க?


Mani . V
நவ 10, 2025 05:24

கப்பத்தை ஒழுங்காக கட்ட வேண்டும் என்ற எச்சரிக்கையா ஊழல் ஆபீஸர்ஸ்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை