உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை - சென்னை இடையே 20 பெட்டிகளுடன் புதிய வந்தே பாரத்

நெல்லை - சென்னை இடையே 20 பெட்டிகளுடன் புதிய வந்தே பாரத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, இதுவரை 16 பெட்டிகளுடன் இயங்கி வந்தது. 20 பெட்டிகளுடன் புதிய ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது. காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் புறப் பட்டு மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் நிலை யத்தை சென்றடையும் இந்த ரயில், அதிநவீன வசதி மற்றும் அதிவேகத்தால் பொதுமக்களின் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இயக்கப்பட்ட 16 பெட்டி நீல நிற ரயிலுக்கு பதிலாக, காவி நிறத்தில் உள்ள 20 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் கடந்த வாரமே திருநெல்வேலி வந்தது. புதிய ரயில் நேற்று முதல் சேவையை துவக்கியது. ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venugopal S
செப் 25, 2025 19:06

சென்னை நெல்லை இடையே இன்னொரு வந்தே பாரத் ரயில் விடும் அளவுக்கு டிமாண்ட் உள்ளது, ஆனால் செய்ய மாட்டார்கள்!


Rathna
செப் 25, 2025 18:30

மூர்க்கம் ஆளுகின்ற நாடுகளில் எல்லாம் ஏழ்மை தலை விருது ஆடுகிறது. பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சிரியா, ஆப்பிரிக்கா இதற்கு சாட்சி. தப்பித்தது துபாய், சவூதி, பஹ்ரைன், கத்தார் மட்டுமே


Jeganathan S
செப் 25, 2025 15:25

வெள்ளம் change


Iniyan
செப் 25, 2025 14:36

தமிழ்நாடு என்ன கசாவா பாய் . கட்டை வண்டி போதுமா ?


Yasararafath
செப் 25, 2025 13:23

தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் இரயில்கள் தேவையா? தமிழ்நாடு மக்கள் சிந்திக்க வேண்டும்.


Jeganathan S
செப் 25, 2025 15:26

தமிழகத்திற்கு ஒட்டகம்தான் வேணுமா....


N S
செப் 25, 2025 19:36

டிக்கெட் எடுக்காமல் போக முடியாது.


வாய்மையே வெல்லும்
செப் 25, 2025 20:41

யாசர் சார் நீங்களும் எப்படியாவது சாம்பிராணி புகை போட பார்க்கறீங்க.. அது நெருப்பு பிடிச்சு பத்தமாட்டேங்கிது .. சாம்பிராணி மேட் இன் போர்கிஸ்தான் அதான் தரம் இல்லை உங்க எண்ணம்போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை