உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாறுதலுக்கு 13,000 ரூபாய் லஞ்சம்: சிக்கினார் விஏஓ

பட்டா மாறுதலுக்கு 13,000 ரூபாய் லஞ்சம்: சிக்கினார் விஏஓ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வேந்தோணி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை பட்டா மாறுதல் செய்ய 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது தாயார் பெயரில் இடத்தை கிரையம் செய்துள்ளார். பெயர் கூற விரும்பாத புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் செய்ய வேந்தோணி வி.ஏ.ஓ., கருப்புசாமி 58, யை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எனது லாகினுக்கு வரவில்லை, வந்தவுடன் சொல்கிறேன், என கூறி மனுதாரரின் போன் நம்பரை வாங்கியுள்ளார். தொடர்ந்து மனுதாரரின் மொபைல் எண்ணுக்கு பட்டா பெயர் மாறுதலாகி விட்டதாக மெசேஜ் வந்ததாக அழைத்துள்ளார். பின்னர் நான் பரிந்துரை செய்ததால் தான் உங்க அம்மா பெயரில் பட்டா கிடைத்தது. ஆகையால் எனக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு புகார்தாரர் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என கூறியதற்கு, ரூ. 2 ஆயிரத்தை கழித்து , ரூ. 13 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார்.எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாதவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுத்தலின் படி, ரசாயனம் தடவிய பணம் ரூ.13000 கருப்புசாமியிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட விஏஓவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
டிச 09, 2025 20:17

திருட்டு மாடல் அரசில் லஞ்ச ஆரம்பத்தொகை பத்தாயிரத்திலிருந்து பல லட்சம்.


V RAMASWAMY
டிச 09, 2025 18:35

Corrupt persons howsoever influential or rich or poor, they may be deserve encounter killings.


V RAMASWAMY
டிச 09, 2025 18:12

நாளொரு ஊழலும், பொழுதொரு லஞ்சமும் பெருகிவருகிறது இந்த எதிலும் முதலிடம் வகிப்பதாகச் சொல்லிக்கொள்ளு மாடல் அரசில்.


G Mahalingam
டிச 09, 2025 14:16

லஞ்சத்திற்கு லஞ்சம். பல வழிகளில் திமுக பணம் கறக்கும் . இந்த அதிகாரி பிடிப்பட்ட உடன் கட்டை பஞ்சாயத்து நடக்கும். அந்த அலுவலர் பின்புலம் பண பலம் வைத்து லஞ்சத்தில் கறந்து விடுவார்கள.அது அறிவாலயம் வரை பணம் பாயும். பிறகு 6 மாதத்தில் மீண்டும் வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். .கடந்த இரண்டு ஆண்டுகளாக பிடிபட்டவர்கள் 90 சதவீதம் மீண்டும் பணியில் சேர்ந்து இருப்பார்கள்.


saravan
டிச 09, 2025 12:47

தினமும் பல செய்திகள் இதுபோல் நடவடிக்கை உண்டா


Ramesh Sargam
டிச 09, 2025 12:26

இப்படி லஞ்சம் வாங்குபவர்கள் பற்றிய செய்தி நாளிதழ்களில் வந்தவண்ணமிருக்கின்றன. இதுபற்றி முதல்வருக்கு தெரியுமா? அவருக்கு நாளிதழ் படிக்கும் பழக்கம் உண்டா? ஒருவேளை இதுபோன்ற செய்திகளை படித்தபின்பு அவர் லஞ்சம் வாங்குபவர்கள் மீது ஏதாவது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்வானவும்திருக்கிறாரா? இல்லை, இந்த நாளிதழ் நிறுவனங்களுக்கு வேலை எதுவும் இல்லை இப்படி லஞ்சம் வாங்கும் செய்தியை பிரசுரிப்பதை தவிர என்று சும்மா இருக்கிறாரா?


Raj
டிச 09, 2025 12:13

13000 ரூபாய் லஞ்சம் வாங்கியவரைப் பிடித்ததில் காட்டிய வேகத்தை பல்லாயிரம் கோடிகளில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறையில் இடுவதில் காட்ட வேண்டும். லஞ்சம் என்று வந்தபின் குறைந்த லஞ்சம் வாங்கினால் குற்றம் அதிகமாகக் கொள்ளையடித்தால் குற்றமில்லையா


சமீபத்திய செய்தி