உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை குறித்து வேலுமணி கருத்து அதிமுக.,வின் கருத்து அல்ல: ஜெயக்குமார் பேட்டி

அண்ணாமலை குறித்து வேலுமணி கருத்து அதிமுக.,வின் கருத்து அல்ல: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்த கருத்து அ.தி.மு.க.,வின் கருத்து அல்ல என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.கோவையில் நேற்று( ஜூன் 06) நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‛‛அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் எனவும், கூட்டணி முறியாமல் இருந்து இருந்தால் 30 முதல் 35 இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் '' எனக்கூறியிருந்தார்.இது தொடர்பாக ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை குறித்த வேலுமணியின் கருத்து, அவரின் சொந்த கருத்து. அ.தி.மு.க.,வின் கருத்து அல்ல. அனுமானத்தின் அடிப்படையில் அவர் பேசி உள்ளார். இப்போது மட்டும் அல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என்பதே அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. தண்ணீரும், இலையும் எப்போதும் ஒட்டாது.எங்களது தலைவர்களை விமர்சனம் செய்தவர்களை தான் நாங்கள் விமர்சனம் செய்தோம். அண்ணாமலை இலவு காத்த கிளி போல் காத்து கொண்டிருக்க வேண்டியது தான். பா.ஜ.,வால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அண்ணாமலை ஒரு புள்ளி ராஜா ஆகிவிட்டார். எதற்கு எடுத்தாலும் புள்ளி விவரங்களைக் கூறி வருகிறார். யார் யார் எவ்வளவு ஓட்டு வாங்கினார்கள் என்ற விவரங்களைக் கூறுகிறார். இதுபோன்ற புள்ளி விவரங்களை எடுக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகத்தான் அவர் செயல்பட்டாரே தவிர ஒரு கட்சியின் தலைவராக அவருடைய பேச்சுகள் இல்லை.அதிமுக.,வுக்கு டெபாசிட் போய்விட்டது அது இது என கதையைக் கட்டுவதை விட, பாஜ.,வின் வளர்ச்சி என்னவென்று பார்த்தால் ஒரு வளர்ச்சியும் கிடையாது. ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்றுக் கொண்டே இருக்கும் பெங்களூரு அணியை போன்றது பாஜ., அனால், அதிமுக சென்னை அணி. இனி வரும் தேர்தலில் வெற்றிகளை குவிப்போம்.இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

sethu
ஜூன் 10, 2024 16:21

படகில் போனோமா நாலு மீன் பிடித்தோம்


Rpalnivelu
ஜூன் 10, 2024 15:44

நான் உளறுவதே கட்சியின் கருத்துளரல்.


Bala
ஜூன் 09, 2024 02:52

நான் கேள்விப்பட்டவரை அதிமுக தொண்டர்கள் திரு அண்ணாமலை அவர்களின் தலைமையில் பணியாற்றி பாஜகவில் உரிய பதவியையும் அங்கீகாரத்தையும் பெற முடிவு செய்துவிட்டார்கள்


venkatesan B
ஜூன் 09, 2024 20:44

yes


NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 08, 2024 19:49

இவரை நம்பினால் ரோட்டுக்கு வர சொல்லுவார்.


Alagusundram KULASEKARAN
ஜூன் 08, 2024 17:32

அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போகலாம் இவர் தலையில் விமானங்கள் இறங்கி ஓடுதளத்தை மத்திய அமைச்சர்களாக மூவர் பார்த்து கொள்வார்கள்


ragu
ஜூன் 08, 2024 16:56

ஜெயக்குமார் உன் வாயாலதான் அதிமுக கெட்டது . எம்ஜிஆர், ஜெ ஜெ யாருன்னு ஞாபகம் இருக்கா பாரத ரத்னா, சிங்கப்பெண் இவர்களை மறந்தவர்கள் நீங்கள், மோடி ஆதரவால்தான் அதிமுக என்ற கட்சி இருக்கு, உன்னைப்போல மற்ற வாய்களாலும் அதிமுக கெட்டது


Vijayakumar Srinivasan
ஜூன் 08, 2024 21:53

உண்மை தான் சார்.இவர்போன்றவர்களால்.கட்சிதற்போதயநிலையில்இருந்துமுழுவதும்2026குள்காணமற்போய்விடும். மோடிதயவால்4வருடம்கட்சியும்ஆட்சியும்ஒடியது.


Natchimuthu Chithiraisamy
ஜூன் 08, 2024 11:34

திமுகவிடம் பணம் பெறுவார் ஜெயக்குமார். அதிமுக வெற்றி அவசியமில்லை. கிரு.முஸ் ஓட்டுகள் திமுகவுக்கு உறுதி செய்த்துவிட்டது. அதிமுக ஆதரவு மத்தியில் யாருக்கு ? எனவே கூட்டணியை தவிர வேறு வழியில்லை. கூட்டணி இருந்திருந்தால் இன்று மத்திய அரசில் அங்கம் தமிழ் நாட்டுக்கு ஒரு மதிப்பு இருந்திருக்கும். வாழும் வழியை பாருங்கள்


PR Makudeswaran
ஜூன் 08, 2024 10:20

அதிமுக வின் ஜெயக்குமாறும் oruvar.


Sathish
ஜூன் 08, 2024 10:09

ஒன்று படுவதே வழி ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாக ஆனது


Bharathi
ஜூன் 08, 2024 09:58

ஆளும் கட்சியா இருந்தப்பவே RK நகர் இடைத்தேர்தல்ல ஜெயிக்க வக்கில்லை. டெபாசிட் தேறினதே பெரிசு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை