| ADDED : டிச 06, 2025 08:56 AM
திருப்பரங்குன்றம்: ''மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் ஒரு ஹிந்து விரோதி,'' என, பா.ஜ. மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது: லோக்சபாவில் மத்திய இணை அமைச்சர் முருகன், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் சம்பந்தமாக பேசியபோது, அமைச்சரின் அருகில் சென்று தமிழக எம்.பி.க்கள் போராட்டம் செய்கின்றனர். அதே நேரத்தில், விருதுநகர் லோக்சபா தொகுதியிலுள்ள திருப்பரங்குன்றத்தின் ஹிந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர், திருப்பரங்குன்றம் தீப பிரச்னை குறித்து ஆதரவாக பேசவில்லை. மதுரை எம்.பி. வெங்கடேசன், திருப்பரங்குன்றம் தீப விஷயத்தில் கலவர பூமியாக்க பார்க்கின்றனர் என பேசுகிறார். அவர் ஒரு ஹிந்து விரோதி. வெங்கடேசனுக்கு ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டு, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இப்பிரச்னையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.