உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க மாநாடு: தி.மு.க - பா.ஜ மீது கடும் விமர்சனம்; அதிமுக மீது கரிசனம்!

த.வெ.க மாநாடு: தி.மு.க - பா.ஜ மீது கடும் விமர்சனம்; அதிமுக மீது கரிசனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழக அரசியல் களத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு எப்போதுமே மவுசு இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் எம்ஜிஆர். அவரை தொடர்ந்து, அதிமுகவுக்கு தலைமையேற்ற ஜெயலலிதாவுக்கும் மக்கள் ஆதரவை அள்ளிக் கொடுத்தனர்.அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், விஜயகாந்துக்கும் மக்கள் ஆதரவு கிடைத்தது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.இவர்களை போலவே அரசியலுக்கு வந்த மற்ற நட்சத்திரங்களுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. வெற்றிடம் இருப்பதாகக்கூறி அரசியலுக்கு வருவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினி, உடல் நிலையை காரணம் காட்டி பின் வாங்கி விட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tqv3lp5m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விஜய் மீது எதிர்பார்ப்புஇத்தகைய சூழ்நிலையில்தான், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இளைய தலைமுறை ரசிகர்களை அதிகம் கொண்டவர் என்பதால், விஜய் தொடங்கிய கட்சி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கருதுகின்றனர்.தன் கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திய விஜய், 'கூட்டணிக்கு யாரேனும் கட்சிகள் வந்தால், அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளத்தயார்' என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் அறிவித்தார். பாஜ, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சிலர், விஜய் தங்கள் கட்சிக்கு வர வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தனர்.மாநாட்டில் விஜய் பேச்சுஎனினும் கூட்டணி எதுவும் இதுவரை உருவாகவில்லை. இத்தகைய சூழ்நிலையில் இன்று மதுரையில் கட்சியின் இரண்டாம் மாநாட்டை நடத்தினார் விஜய். அதில், தன் கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டை விஜய் அறிவித்தார்.'பாசிச பாஜவுடன் கூட்டணிக்கு சேர நாம் என்ன ஊழல் கட்சியா' என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த கூட்டணி, பொருந்தாக்கூட்டணி என்றார்.''எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது? அப்பாவி தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர்,'' என்று அதிமுக தலைமை பற்றி பட்டும் படாமலும் விமர்சனத்தை முன் வைத்தார். திமுக - பாஜவை பற்றியும், பிரதமர், முதல்வர் பற்றியும் கடுமையாக விமர்சித்த விஜய், அதிமுக பெயர் குறிப்பிடாமல் மட்டுமே பேசினார்.மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜூனாவும், அதிமுக -பாஜ கூட்டணியை விமர்சித்தார். பின்புற வாசல் வழியாக பாஜவை அழைத்து வருவதாக பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Barakat Ali
ஆக 22, 2025 11:02

திமுகவால் இறக்கப்பட்ட கட்சி என்பதை மறைக்க மிகவும் கஷ்டப்படுகிறார் ........


Sundar R
ஆக 22, 2025 08:14

All those that were told by Missionary Christian Joseph Vijay in the Madurai Conference were not factual. He is undoubtedly a benami party of DMK and a big DMK Sombu and a Congress Jaalra. He is another dangerous Anti-national and a Separatist, a big Security Threat and an unwanted Liability for our Tamil Nadu people. Hindus and Muslims should get amalgamated and dump Joseph Vijays TVK Party well before the 2026 elections.


Anbuselvan
ஆக 22, 2025 08:56

BJP may want Vijay to fight lonely as it may believe that they can split one of the major minority community votes going from DMK Combine.


vadivelu
ஆக 22, 2025 07:56

மத பாசம் கொண்ட ஒரு கூட்டம் , அதனுடன் விடலை கூட்டம் சேர்ந்து ஒரு 20 % விழுக்காடு வாக்குகளை அதிக பட்சமாக பெரும். 18-30 வயதுள்ள வாக்காளர்கள் சுமார் ஒரு கோடி நபர்கள் , அவரை பாசத்தால் ஆதரிப்போர் 40 லட்சம் நபர்கள். தேர்தலுக்கு பின்னர் அது அப்படியே பாதியாக குறைந்து கமலின் நிலையை அடைவார்.


HoneyBee
ஆக 21, 2025 21:51

எம்ஜிஆர்.. பெயர் ஒன்றே போதும் சோசப்பு . அவர் செய்ததில் 0.5 பங்கு கூட நீங்க செய்யல.


beindian
ஆக 21, 2025 21:25

ஜோசப் விஜய் சொன்னது இதையும் சேர்த்துக்கொள்ளுங்க நீங்கமோடி ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மை செய்யவா? இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா? என்னதான் நீங்க குட்டிக்கரணம் அடித்தாலும், தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது.. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க? ஒரு எம்.பி சீட் கூட தரவில்லை என்பதற்காக தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதுவுமே செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது பாஜக அரசு." எனப் பேசியுள்ளார் விஜய்.


vadivelu
ஆக 22, 2025 08:01

பாவம் இவருக்கு தமிழகம் எப்படி முன்னேறி இருக்கிறது என்று தெரியவில்லை. சரி இந்த முன்னேற்றத்திற்கு இந்திய அரசு காரணம் இல்லை என்றால் மாநில அரசுதான் காரணம். பிறகு ஏன் தி மு க அரசை எதிர்க்கணும். மாநில அரசினால் முன்னேற்றம் என்றால் அதற்க்கு பண உதவி, தடுப்புகளை போடாதது மத்திய அரசுதான். ஏன் என்ன ஐதீர்கள் என்று கேட்கணும்.


SIVA
ஆக 21, 2025 20:45

எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் முன்பு அவரது ரசிகர்களும் திமுகவில் எம்ஜிஆர் மன்றம் என்ற பெயரில் ஒரு கட்சி போன்று செயல் பட்டனர் அதனால் அவர்களால் திமுகவை எளிதாக வெற்றி பெற முடிந்தது . ஜெயலலிதா அவர்களும் அதிமுகவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்து பின் அதிமுக தலைவி ஆனார் . இவர்கள் வெறும் சினிமா புகழால் மட்டும் வெற்றி பெற வில்லை ......


Nanchilguru
ஆக 21, 2025 20:41

இன்னொரு கமலை பார்த்து யாரும் கவலை படவேண்டியதில்லை . தேர்தலுக்கப்புறம் தேடவேண்டியிருக்கும்


rishi
ஆக 21, 2025 20:21

ஜோசெப் விஜய் திட்டம் , மதமாற்றம் , கோவில் நிலங்களை அபகரிப்பது, கிறிஸ்டின் மிஷனரிகளை வளர்ப்பது, இந்த அந்நிய கை கூலியை நிராகரியுங்கள், எவனோ கதை திரைக்கதை , பாடல் , சண்டை காட்சி , நடனம் அமைத்து, அதை சொல்லிக்கொடுத்ததை அப்படியே செய்து விட்டு இன்று முதல்வர் ஆசை வந்திருக்கிறது என்றால் தமிழ் நாட்டில் முட்டாள்கள் நிரம்ப இருப்பதை காட்டுகிறது , ஜோசெப் விஜய் ஏதாவது ஒரு கட்சியின் சாதாரண தொண்டனோடு விவாதம் செய்யும் திறமை இருக்கிறதா. தமிழ் நாட்டின் சாபக்கேட்டு மதம் மாற்றும் கும்பல் என்று தெரிந்தும் இந்த அறிவில்லாத கூட்டம் சூழ்ச்சி வலையில் சிக்க நினைப்பது.


MARUTHU PANDIAR
ஆக 21, 2025 21:23

மதுரை எப்போதுமே சினிமா மோகம் கொஞ்சம் தூக்கலாக கொண்ட நகரம். மக்களுக்கு சினிமா நடிகர் என்றால் கேட்க வேண்டுமா? இப்போது கூட படமே ஓட்டாத சில பழைய தியேட்டர்களுக்கு வாஞ்சையின் அடிப்படையில் சில மக்கள் ரெகுலராக விசிட் அடிப்பதும், சிலர் அங்கேயே தங்குவதும் உண்டாம்.


S.L.Narasimman
ஆக 21, 2025 19:40

, எடப்பாடியார் சுற்றுபயணகூட்டத்திற்கு மக்கள் பெருந்திரளாக வருவது கண்டு ஏற்கனவே தீமுக. அதன் கூட்டணி கட்சிகள் அரண்டு ஊளையிட தொடங்கிய நிலையில் இப்போது தீமுகாவை ஆதரித்து வந்த கிருத்துவ சிறுபான்மையினரின் ஓட்டு விசய்க்கு போகிறதேன்னு வயித்தை கலக்க ஆரம்பித்து விட்டது.


nagendhiran
ஆக 21, 2025 19:35

மலையை பார்த்து நாய்கள் குரைப்பது சகஜம் தான்? அனால் நாய்களால் மலைக்கு ஒரு பாதிப்பும் ஆகாது தான் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை