உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயபிரபாகரன், சவுமியா போராடி தோல்வி

விஜயபிரபாகரன், சவுமியா போராடி தோல்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : விருதுநகர் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். அ.தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வேட்பாளராக, விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். பா.ஜ., வேட்பாளராக நடிகை ராதிகா களமிறங்கினார்.மூன்று வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஓட்டுப்பதிவிற்கு பிந்தையகருத்துக்கணிப்பில், இழுபறி நிலை ஏற்படும் என கருத்துக்கள் பரவின. அதை பிரதிபலிக்கும் வகையில், மாணிக்கம் தாகூர் மற்றும் விஜயபிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவியது.கடைசி வரை போராட்டமாகவே இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியாக மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.

அன்புமணி மனைவி:

தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் முன்னணியில் இருந்து வந்தார். 15 சுற்றுகள் வரை முன்னணியில் இருந்தவர், அதன்பின், தி.மு.க.,வுக்கும் அவருக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டது.கடைசிவரை போராடிய அவர், 4 லட்சத்து 11 ஆயிரத்து 367 ஓட்டுகள் பெற்று, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தி.மு.க., வேட்பாளர் மணி, 4 லட்சத்து 32,667 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Eggson
ஜூன் 05, 2024 16:36

It is the vote of minorities that caused a lot to defeat NDA candidates with low margin votes.


தமிழ்
ஜூன் 05, 2024 11:18

இந்ததேர்தலில் மிகவும் மகிழ்ச்சிகரமான சம்பவம். மரத்துக்கு மரம் தாவுவதுபோல் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி கல்லா கட்டும் இந்த பார்ட்டி தோற்றதுதான்.


veeramani
ஜூன் 05, 2024 10:26

போராடி போட்டியில் ஜெயிக்கய்யலாமல் சகோதரி திருமதி சௌமியாவிற்கு தமிழ் மக்களின் செல்லப்பிள்ளை விஜயப்ரபாகருக்கும் வாழ்த்துக்கள்


SADHIK ADAM
ஜூன் 05, 2024 08:18

ஐயோ பாவம்


SADHIK ADAM
ஜூன் 05, 2024 08:16

வடை போச்சே


SADHIK ADAM
ஜூன் 05, 2024 08:15

சரத்குமார் வந்து இவ்வளவு போராடியும் மூன்றாவது இடத்திற்கு சென்றது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது ராதிகாவுக்கு??


Mubarak ali Mohammed
ஜூன் 05, 2024 07:52

தோல்விக்கு காரணம் பாஜகவின் கூட்டணி.


vadivelu
ஜூன் 05, 2024 06:21

யாருக்கு தோல்வியே இல்லையோ, எடப்பாடிக்கு வெற்றி . துட்டுக்கு துட்டு, அண்ணாமலையை தோற்கடிச்சாச்சு.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ