உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கொள்கை வேறு; எனது கொள்கை வேறு: சொல்கிறார் சீமான்

விஜய் கொள்கை வேறு; எனது கொள்கை வேறு: சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' திராவிடமும், தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.இது தொடர்பாக நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: விஜய் என்னை விமர்சனம் செய்கிறார் என ஏன் எடுத்து கொள்ள வேண்டும். அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்து போகவில்லை.நான் கூறுவது என் நீண்ட கால இன வரலாறு. இங்கு உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு என்ன என்பது. திராவிட கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். தமிழ் நேயர்கள்.கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன். வரலாறு, காலம் எனக்கு இந்த பணியை கொடுத்தது. காரணம் என் இனத்தின் மரணம். எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். அதை செய்கிறேன். திராவிடமும், தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று கிடையாது. அது வேறு. இது வேறு. இது எனது நாடு. எனது தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல்.என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி என பெயர் வைத்த போது யாரும் எதிர்த்து பேசவில்லை. நாங்கள் தமிழ் தேசம்பெயர் வைத்த போது பாசிசம், பிரிவினைவாதம் என சொல்கிறீர்கள். இது ஏற்புடையது அல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Matt P
அக் 28, 2024 08:55

என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி என பெயர் வைத்த போது யாரும் எதிர்த்து பேசவில்லை....என் டீ ஆர் தெலுங்கு நாட்டில் அவர் கட்சிக்கு பெயர் வைத்தார். நீ இங்கே பெயர் வைத்தால் இங்குள்ளவர்கள் எதிர்க்க தான் செய்வார்கள். இங்கு கால காலமாக வாழ்கின்ற தெலுங்கு மலையாளம் கன்னடம் சௌராஷ்டிரா மார்வாடிகளை ஒதுக்கி விட்டா நாம் தமிழர் என்று வாழ்ந்து விட முடியும். சிங்கப்பூர் மலேஷியா இலங்கை சென்று குடியுரிமை பெற்று பின் நாம் தமிழர் என்று அங்கு ஆரம்பிக்கலாமே. இல்ல்லாவிட்டால் மறைமுகமாக அங்குள்ளவர்களுக்கு பின்பலமாக செயல் படலாமே. அதுக்கெல்லாம் திராணி வேண்டும். உண்மை தான்.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 28, 2024 08:27

விஜய் மாநில அரசு போர்டு சான்று பெற்றவர், சீமான் அதுக்கும் மேல சீபீ எஸ் ஈ தரச்சான்று பெற்றது. ரெண்டுமே தண்ட திராபை மேடை பேச்சோடு சரி ... போவியா அங்கிட்டு


J.V. Iyer
அக் 28, 2024 04:25

நாடு என்றாலும் தேசம் என்றாலும் ஒன்றுதானே? இவர் தனியாக நின்று எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் என்ன சாதிக்கப்போகிறார்? இவர் இனம் ஸ்ரீ லங்காவில் அழிந்தது என்றால், அங்குபோய் அல்லவா இவர் போரிடவேண்டும்? இங்கு என்ன செய்கிறார்? குழம்பிய மனிதர் குட்டையை குழப்புகிறார்.


Oviya Vijay
அக் 28, 2024 00:17

தமிழக அரசியல் கோமாளி சீமான்.


Matt P
அக் 27, 2024 22:38

குமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ் வாழ்த்து பாடிய மனோமணியம் சுந்தரத்தை அவமதித்த இவர் எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கிறாராம். இலங்கை தமிழர்களுக்கும் குமரி மாவட்டத்து தமிழர்களுக்கும் பேச்சு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஒற்றுமைகள் இருக்கிறது. வெளியில் நாம் தமிழர் என்ற பிரிவினை. உள் மனதில் பல பிரிவினைகள் இது தான் இவர் நடத்தும் அரசியல்.


Ramesh Sargam
அக் 27, 2024 22:01

ஒரு புது கட்சியின் முதல் மாநாடு. ஆனால் பல முந்தைய கட்சியினருக்கு ஒருவித சின்ன பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றிலிருந்து அவர்கள் தூக்கத்தை கூட இழக்கலாம், அடுத்து விஜய் என்னசெய்யபோகிறாரோ, என்ன பேசப்போகிறாரோ என்று. பிறகு எல்லாம் சரியாகிவிடும். பத்தோடு ஒன்று பனினொன்று. அதுபோல இந்த தமிழக வெற்றி கழகமும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை