உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினகரனுக்கு எதிரான விதிமீறல் வழக்கு ரத்து

தினகரனுக்கு எதிரான விதிமீறல் வழக்கு ரத்து

சென்னை:அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுக்கு எதிரான, தேர்தல் விதிமீறல் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தொகுதியில், அ.ம.மு.க., சார்பில் முருகன் என்பவர் போட்டியிட்டார். அவரை ஆதரித்து, தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, வாகனங்கள் அணிவகுப்பு, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது என, தினகரனுக்கு எதிராக கமுதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேர்தல் விதிகளை மீறியதாக, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும் ஓராண்டுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யவும், மனுவில் கோரியிருந்தார்.மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி