உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனநாயகத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிடும்; சொல்கிறார் கமல்

ஜனநாயகத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிடும்; சொல்கிறார் கமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாக்காளர் பட்டியல்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்; நமது வாக்காளர் பட்டியல் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. யார் வேண்டுமானாலும் சரிபார்க்கும் வடிவத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட ஏன் மறுக்க வேண்டும்? எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் காட்டும் தரவுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளிலிருந்து தான் எடுக்கப்பட்டுள்ளன எனும் போது, அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழியை ஆணையம் ஏன் கேட்கிறது? மஹாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் சந்தேகத்திற்கிடமான சேர்க்கைகள் அம்பலப்படுத்தப்படும்போது, பீஹாரில் இப்போது சிறப்புத் தீவிரத் திருத்தம் என்னும் பெயரில் (ஸ்பெஷல் இன்டென்ஸிவ் ரிவிஷன்) பெருமளவிலான நீக்கல்கள் ஏன் செய்யப்படுகின்றன?என்னுடைய சகோதரர் ராகுலும், இண்டி கூட்டணியின் எம்பிக்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், மக்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளை எழுப்பி, ஜனநாயகத்தின் மக்கள் மன்றமான பார்லிமென்டில் இருந்து தேர்தல் ஆணையம் வரை அமைதியாக நடந்து சென்றதற்காக கைது செய்யப்பட்டனர்.வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகப் போராடிய மக்கள் பிரதிநிதிகளை கைது செய்வது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்குச் சமம். விடுதலையடைந்த முதிர்ச்சியுற்ற குடியரசு நாட்டில் நடக்கக் கூடாத சம்பவம் இது.வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும்போது, அது வெறும் ஒரு சிறிய அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் இஃதொரு தார்மீக நெருக்கடி.வாக்குச் செலுத்திய வாக்காளர் பட்டியல்களை இயந்திரத்தால் வாசிக்க முடிகிற வடிவத்தில் வெளியிடுங்கள். அந்தப் பட்டியல்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதிகாரத்தின் வார்த்தைகளால் சொல்வதை விட, மக்களே உண்மையை நேரடியாகப் பார்க்கட்டும்.இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. பாஜ கூட்டணியில் உள்ள சகோதரர்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளையும், வெளிப்படைத்தன்மைக்காக ஒன்றுபடுமாறு நான் அழைக்கிறேன். இந்தக் கோரிக்கையை, கிராமம் முதல் நகரம் வரை இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்வோம். இது நமது வாக்குகளைப் பாதுகாக்கவும், நம் குடியரசைப் பாதுகாக்கவும் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

sankaranarayanan
ஆக 12, 2025 18:31

நீ என்னய்யா சொல்லவர்றே ஒன்றுமே புரியவில்லையே உனக்காவது என்ன சொன்னோம்முனு புரியுதா இது சினிமா வசனமாக இருக்கக்கூடாது சினிமாவில் பல பேருக்கு ஒன்றுமே புரியாது அதை இங்கேயும் பின்பற்றினால் நேரம்தான் வீணாகும் மக்களுக்கு ஒன்றுமே புரியாது


Swaminathan L
ஆக 12, 2025 09:59

பீஹாரில் தற்போதைய வாக்காளர் விரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அறுபத்தைந்து இலட்சம் வாக்காளர்கள் முறையீடு செய்யவும், தகுந்த சான்றுகளோடு தங்கள் வாக்காளர் அட்டையை உறுதி செய்யவும் அவகாசம் இருக்கிறது. அங்கே அவர்கள் எவரும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று ஏன் ஒரு ஊடகம் உதவியோடு கூட புகார் சொல்லவில்லை பொதுவெளியில் இதுவரை? ஆதார் அட்டை தயாரிப்புக்கு தரக்கூடிய ஆவணங்கள் எதிலும் போலித்தன்மை இருந்து அது சரி பார்க்கப் படாமல் ஆதார் அட்டை கிடைத்து விட்டால் அதை வைத்து வாக்காளர் அட்டை பெற வாய்ப்பு உள்ளது. இன்னமும், ஆதார், பான் அட்டை, ரேஷன் கார்டு, வாகன ஓட்டுரிமம் கார்டு, சமையல் எரிவாயு, வங்கி சேமிப்புக் கணக்கு என்று அத்தனையையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டால் தான் மின்னணு முறையில் மனுக்கள் சரிபார்ப்பு, போலி கார்டுகள் தவிர்ப்பு எல்லாம் சாத்தியமாகும். ஒருவரின் பெயர் கூட இந்த மாதிரி பல கார்டுகள், ஆவணங்கள் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இல்லாமலும் இருக்கிறதே. ஒரு ஆவணம், அட்டையில் இனிஷியலோடு பெயர், இன்னொன்றில் தகப்பனார் பெயர் மற்றும் ஸம்பந்தப்பட்டவர் பெயர், இன்னொன்றில் ஸம்பந்தப்பட்டவர் பெயருக்குப் பிறகு தகப்பனார் பெயர் சேர்த்து என்று பல மாறுபாடுகள் இருக்கின்றன. இவையெல்லாம் சரி செய்யப்பட்டால் தான் உறுதித்தன்மை நிச்சயமாகும்.


Satish NMoorthy
ஆக 12, 2025 08:39

It's tiring to see such an irritating daily in the news


Balasubramani
ஆக 12, 2025 07:47

such a irritating irresponsible fellow


naranam
ஆக 12, 2025 07:44

நடிப்பதைத் தொடர்கிறார் போல!


Padmasridharan
ஆக 12, 2025 06:33

எல்லா விஷயத்திலும் பணம், அதிகாரம் தானே உள்ளது சாமி. தமிழ்நாட்டின் TASMAC ஊழலில் இவ்வாறு உண்மையை மக்களை நேரடியாக பார்க்கச்செய்ய இயலுமா.


Mani . V
ஆக 12, 2025 06:32

சார் எம்பி ஆகி விட்டதை உலகுக்குத் தெரியப்படுத்த குரல் கொடுத்து விட்டாராம்.


D Natarajan
ஆக 12, 2025 06:30

நடிப்பதோடு நிறுத்திக்கொண்டால் நல்லது.


Anantharaman
ஆக 12, 2025 06:06

சினிமா வசனமே குழகுழா எனப் பேசும் இந்த கத்துக்குட்டி அரசியல்வாதி தன் திறமைக்கு மீறிய ஆர்த்திக்கும், அறிவற்ற ராவுல் டோன்றோரை ஆதரித்துப் பேசுவது நகைப்பு தருவதுதான் அல்லாமல் அறிவார்ந்த பேச்சல்ல.


Ramachandran
ஆக 12, 2025 05:43

This guy is a moron like ....