சென்னை : ''நதிநீர் இணைப்புத் திட்டத்தில், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், வைப்பாறு, மலட்டாறுகøளையும் இணைக்க வேண்டும்,'' என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவரும், ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி கூறியதாவது: கடந்த ஆட்சியில், நீர் வளம் மற்றும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததால், விவசாயிகள் வளர்ச்சி பெரிதும் ப õதிக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில், வறட்சிப் பகுதிகளான, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் பகுதிவாசிகளின் நீண்ட கால கோரிக்கையான, நீர் ஆதாரதத்தைப் பெருக்க, நதிநீர் இணைப்புத் திட்டம் மட்டுமே தீர்வாக அமையும்.
இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து காவிரி ஆறு, அக்னிஆறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, வைகை ஆறு மற்றும் குண்டாறு நதிகளை இணைப்பதற்கு செயல் வடிவம் கொடுத்து வருகின்றன. தென் தமிழகத்தில், வறட்சி மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் பகுதிகளில் வைப்பாறு, மலட்டாறு மிக முக்கியமானவை. நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ், இந்த ஆறுகளையும் இணைத்தால், இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள, மானாவாரி நிலங்கள் பயன்பெறும். இதை நிறைவேற்றித் தர வேண்டுமென, முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.