மேலும் செய்திகள்
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியது
4 hour(s) ago | 1
தஞ்சாவூர் : தஞ்சாவூர் நகர் பகுதியை கடந்தும் செல்லும் கல்லணை கால்வாயில் கழிவு நீர் கலந்து, மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் வீசும் நிலையில், விவசாய நிலங்களில் பயிர்கள் பாதிப்பை சந்திப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் படி, நீர்வளத்துறை கல்லணை கால்வாய் கோட்ட பொறியாளர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கால்வாயில் நேற்று ஆய்வு செய்தனர். கழிவுகளை ஊழியர்கள் அகற்றினர்.அத்துடன், கால்வாயில் தண்ணீர் மற்றும் இறந்த மீன்களின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்து செல்லப்பட்டன.
4 hour(s) ago | 1