உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை சபதம்

தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை சபதம்

கோவை: 'இனி எல்லா மேடைகளிலும் தி.மு.க.,வை தோலுரித்துக் காட்டப்போகிறோம்,'' என்று, கோவையில் சாட்டையடி போராட்டம் நடத்திய பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று காலை 10 மணிக்கு கோவை நேரு நகரில், தனது வீட்டுக்கு முன் நின்று, அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் ஆறு முறை, அடித்து கொண்டார். அப்போது பா.ஜ., தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பா.ஜ.,வினர் வெற்றி வேல், வீர வேல்' என கோஷம் எழுப்பினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q9fg4m3s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்து நம்முடைய அன்பை எல்லாம் பெற்ற மன்மோகன் சிங் இன்று நம்முடன் இல்லை. அவருக்கு பா.ஜ., சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வரும் நாட்களில் எப்போதும், அவர் நமது நாட்டிற்கு வகுத்து கொடுத்துள்ள பொருளாதார நினைவு கொள்கையை நினைவு கூர்வோம். ஒரு தனி மனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீது இருக்க கூடிய கோபத்தை காட்டக் கூடிய போராட்டம் அல்ல.கண் முன்னால் அடுத்த தலைமுறை அழித்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்து இருக்கிறது. போராக இருந்தாலும் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது மண்ணின் மரபு. வரும் காலங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த போகிறோம். ஆனால் இன்னைக்கு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடுக்க கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாட்களுக்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எதற்காக ஆறு சாட்டை அடி? காரணம் இருக்கிறது. முருகப்பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை ஆறு சாட்டை அடியாக சமர்ப்பிக்கிறோம். விரதம் இருக்கப் போகிறோம். அரசியல் பணியை செய்ய போகிறோம். ஆண்டவனிடம் முறையிட போகிறோம். எல்லா மேடைகளில் தி.மு.க., வை தோலுரித்து காட்ட போகிறோம். 3 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னாடி கொண்டு சென்று உள்ளனர்.

கடுமையாக உழையுங்கள்

நல்ல யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கிறோம். காலணியை நேற்று கழற்றி வைத்து விட்டேன். தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் காலணியை அணிய போவதில்லை. தமிழக மக்களுக்காக செய்கின்றேன். கட்சி தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். கடுமையாக உழையுங்கள். மாற்றத்தை கொடுப்போம்.மன்மோகன் சிங் மறைவு காரணமாக, பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிப்போம். நம்முடைய மண்ணில் உடலை வறுத்தி ஒரு விஷயத்தை முறையிடும் போது, அதற்கான பலன் இருக்கிறது. உடலை வறுத்தி வேண்டுதல் நடத்துவது நமது மண்ணில் ஒரு நிகழ்வு தான்.

தமிழ் மரபு

காவல்துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்தி அடைந்ததாக எப்படி கூற முடியும்? போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காக்கி உடையின் மீது தான் என் கோபம். சாட்டையில் அடிப்பது தமிழ் மரபு தான். சாட்டை அடியை ஆண்டவனிடம் சமர்ப்பித்துள்ளேன். எல்லா தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள். அறவழியில் போராடுங்கள்.

நம்பிக்கை

ஆண்டவனோடு உங்களை சமர்ப்பியுங்கள். நல்ல வழி கிடைக்கும். அதற்காக தொடர்ந்து களத்தில் இருங்கள். வெற்றி, தோல்வியை தாண்டி சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றி, தோல்வி என்பது இரண்டாவது. மக்கள் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளேன். பொறுப்பு வரும் போகும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமாவுக்கு அண்ணாமலை பதிலடி!

லண்டன் சென்று வந்த பின் அண்ணாமலைக்கு ஏதோ ஆகிவிட்டது என திருமாவளவன் கூறியதற்கு, 'லண்டன் சென்று வந்த பின் எனது அரசியல் தெளிவான பாதையில் செல்கிறது. தனக்கு புரிதல் கிடைத்து இருக்கிறது. லண்டன் சென்றுவந்த பின் இன்னும் நல்லவனாகி விட்டேன் என நினைக்கிறேன்' என அண்ணாமலை பதில் அளித்தார்.

அமைதியாக இருங்க...!

கோவையில் சாட்டையடி போராட்டம் நடத்திய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, வீட்டின் முன் கூடி இருந்த தொண்டர்களை அமைதிப்படுத்தினார். அப்போது தொண்டர்கள் அண்ணாமலையை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 417 )

Mariadoss E
ஜன 06, 2025 07:06

தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி வந்து பெண்களுக்கு எதுவும் நடக்க விட மாட்டேன் என்று உத்தரவாதம் தர முடியுமா? உத்தர பிரதேசத்தை பார்த்தால் அப்பிடி ஒன்றும் தெரியவில்லையே .....


Mariadoss E
ஜன 06, 2025 07:04

என்ன ரத்தத்தையே காணோம், ரணகளம் ஆக்க வேண்டாமா......


Mariadoss E
ஜன 06, 2025 07:01

சபாஷ், சரியான தண்டனை.


Bala
டிச 30, 2024 15:04

தமிழகத்தின் நாளைய முதல்வர் திரு அண்ணாமலை அவர்களைத் தவிர்த்து எவனும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத நிலை இப்பொழுது. திரு அண்ணாமலை அவர்களின் திமுகவிற்கு எதிரான யுத்தம் வெற்றியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. 2026 இல் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும்


kantharvan
ஜன 02, 2025 15:14

இறுதிக்கட்டம் அண்ணாமலைக்கு ?? அதுக்கப்புறம் கட்டமும் இல்லை கட்டிடமும் இல்லை. தெருவில சாட்டையடித்து கொன்டு போனா ஜீவனத்திற்கு எதாவது தேறும் தமிழர்கள் தர்மவான்கள் ??


Mariadoss E
ஜன 06, 2025 07:02

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது


VSMani
டிச 30, 2024 13:56

தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம் என்று சொல்லிவிட்டு இவர் தோலையல்லவா சாட்டையால் தோலுரித்து காட்டிவிட்டார்.


S.L.Narasimman
டிச 29, 2024 07:14

கேலிசித்திரமாகி வருகிறது.


Palanisamy T
டிச 29, 2024 07:13

அண்ணாமலை ஏதோவொரு தவறான முடிவை எடுத்ததை போல் தெரிகின்றது. அவரின் இந்தச் செய்கையால் திமுக ஆட்சியாளர்களை அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது. செவிடன் காதில் சங்கை ஊதியக் கதைதான். மன்மோகன் இறுதிச் சடங்கையே அரசியல் ஆதாயமாக்கி கொண்டவர் தமிழகமுதல்வர். அவரின் இறுதிச் சடங்கிற்காக அவரின் குடும்பத்தாரின் கோரிக்கையை பிரதமர் ஏற்கவில்லையாம் என்ன நடந்ததென்றே தெரியாத நிலையில் பிரதமரையே இவர் சாடியுள்ளார். மக்களே நினைத்தாலும் திமுகவின் குடும்ப ஆட்சியின் வலிமையான பிடியை அவர்களால் இனிமேல் ஒன்றும் செய்யமுடியாத நிலை. இதுதான் உண்மை.


Kavi
டிச 29, 2024 06:36

கண்டிப்பாக திமுக பலருடைய பாவங்களை பெற்றுக்கொண்டுகிறது ஆகையால் கர்மா வழிவகுக்கும்


ஜெய்ஹிந்த்புரம்
டிச 29, 2024 01:18

இவருக்கு பின்னாலே நிற்பவர்கள் கூட சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். காமெடி பீசு. இதை பாத்து சில சங்கிகள் ஓவராக சீன போடுகிறார்கள். குற்றவாளியை கைது பண்ணியாகி விட்டது. இன்னமும் என்ன அரசியல் ஆதாயம் பார்க்க குதிக்கிறார்? காஸ்மீரில், உத்திரபிரதேசத்தில் இவருடைய கட்சி பாலியல் வக்கிரர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி, பாலியல் வைக்கிறதுக்கு ஆளானவர்களின் குடும்பத்தாரை துன்புறுத்தியும், கொன்றும் வெறித்தாண்டவம் ஆடிய கேவலம் போலத் தான் இவர் செய்து கொண்டிருக்கும் அரசியல் காமெடிகளும்.


MARI KUMAR
டிச 28, 2024 22:33

அண்ணாமலையின் சாட்டையடிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்... திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை