உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுக்கு பயப்பட நாங்கள் அடிமைகள் அல்ல: உதயநிதி

பா.ஜ.,வுக்கு பயப்பட நாங்கள் அடிமைகள் அல்ல: உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புத்துார் : ''மத்திய பா.ஜ., அரசின் மிரட்டலுக்கு பயப்படுவதற்கு, தி.மு.க., அடிமைகள் அல்ல. எதை வேண்டுமானாலும் சந்திப்போம்,'' என, அமைச்சர் உதயநிதி பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0jny1k8w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டியில், தி.மு.க., மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டச் செயலரான அமைச்சர் பெரிய கருப்பன் தலைமை வகித்தார்.

தி.மு.க., இளைஞரணி செயலரும், அமைச்சருமான உதயநிதி பேசியதாவது:

கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், 38 தொகுதிகளில் லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அடுத்து உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். அப்போது, நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். தொடர்ந்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றோம். இப்போது நாம் ஆளுங்கட்சி. வரும் லோக்சபா தேர்தலில், கடந்த தேர்தலை விட, ஒரு ஓட்டு குறைவானால் கூட எதிர்க்கட்சிகள் நமக்கு ஓட்டும், மக்கள் செல்வாக்கும் குறைந்துவிட்டது என்பர். இப்போது நாம் வாங்கும் ஓட்டுகள் தான், 2026 சட்டசபை தேர்தலுக்கு முக்கியம்.மத்திய பா.ஜ., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. அ.தி.மு.க., ஆட்சியின்போது, மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்.சமீபத்தில் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது; மத்திய அமைச்சர்கள் வந்தனர். அவர்களிடம் முதல்வர் நிவாரணம் கேட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் தலா 6,000 ரூபாய் வழங்கினார். ஆனால், மத்திய அரசு ஒரு பைசா கூட நிவாரணம் கொடுக்கவில்லை.அனைத்து கார்ப்பரேட்களுக்கானது தான் பா.ஜ., அரசு. அக்கட்சி ஆட்சியின் ஒன்பது ஆண்டில் வளர்ந்தது மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குடும்பம் மட்டும் தான். கம்பெனி துவக்கிய ஆறு ஆண்டுகளில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றார். ஏர்போர்ட், துறைமுகம் என, அனைத்து துறைகளும் அவரிடம் வழங்கப்பட்டு விட்டது.இதை அ.தி.மு.க., தட்டிக் கேட்காமல் இருக்க சி.பி.ஐ., - இ.டி., என உருட்டி மிரட்டினர். இப்போது, நம்மையும் மிரட்டிப் பார்க்கின்றனர். ஆனால், தி.மு.க., அடிமை அல்ல பயப்படுவதற்கு. எதை வேண்டுமானாலும் சந்திப்போம். நிதி நெருக்கடியிலும் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். அதை மக்களிடம் கூறுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

DARMHAR/ D.M.Reddy
பிப் 19, 2024 02:23

தகப்பன் முதல் மந்திரியாக இருப்பதால் சின்ன பையன் இப்படி ஏதாவது உளறிக்கொண்டு இருப்பது சகஜமே


Suresh
பிப் 18, 2024 23:03

ஒருவழியா கஷ்டப்பட்டு பிளாஸ்டிக் சேர்கள ரொப்பிடீங்க போல?


Bala
பிப் 18, 2024 22:54

நீங்க ரெண்டு திராவிட கட்சிகளும் இத்தனை வருஷமா மாத்தி மாத்தி அடிச்ச கொள்ளையிலதான் நிதி நெருக்கடி தமிழ்நாட்டு வந்தது. காமராஜர் போன்றவர்கள் தமிழகத்தை தொடர்ச்சியாக ஆண்டிருந்தால் தமிழகம் நிதி மிகை மாநிலமாக எப்பொழுதோ மாறியிருக்கும். மணல் கொள்ளை கனிம வள கொள்ளை ரௌடியிசம் திராவிட கட்சிகளின் சாராய வியாபார கொள்ளை போன்றவைகளால்தான் மக்களை இத்தனை ஆண்டுகள் பிச்சைக்காரர்களாக மாற்றியிருக்கிறீர்கள். எல்லா தவறுகளையும் செய்துவிட்டு நிதி நெருக்கடி என்று சொல்லி மத்திய அரசு மீது பழி போட வேண்டியது நீங்களும் உங்க பேச்சும். ஆனால் தமிழக மக்கள் இப்பொழுது சமூக வலைத்தளங்களால் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். பழைய பிஞ்சு போன வடக்கு தெற்கு ஹிந்தி திணிப்பு பாணி பூரி பீட வாயன் எல்லாம் சொல்லி மக்களை ஏமாத்த முடியாது. தமிழகத்தில் நீங்கள் செய்யும் ஊழல்களை மடைமாற்றாதீர்கள். மறைக்க முயலாதீர்கள். உங்க மாறன் கார்பொரேட் குரூப்தானே ஒரு IPL கிரிக்கெட் டீமையே விலைக்கு வாங்கி பல கோடி கொடுத்து வீரர்களை ஏலம் வாங்கும் அளவிற்கு எங்கே இருந்து பணம் வந்தது? அவர்கள் உழைத்து சம்பாதித்த பணமா? ரெட் ஜெயண்ட் முதலீடுகள் எல்லாம் உழைத்து சம்பாதித்த பணமா? ஜீ ஸ்கொயர் முதலீடுகள் எல்லாம் நேர்மையான வழியில் சம்பாதித்ததா? கோவில் உண்டியல் பணமெல்லாம் நியாயமான ஹிந்து சமய அறத்திற்கும் வளர்ச்சிக்கும்தான் பயன்படுகிறதா? தமிழக மக்கள் வரும் தேர்தலில் உங்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்


adalarasan
பிப் 18, 2024 22:12

யாரும் பய முடித்தியதா தெரியலையே? ஒரு குற்றம் செய்யாதவஙக யாரிடமும் பயப்பட வேண்டியதில்லை ? அடிக்கடி சார் இப்படி சொல்வதிலிருன்து உள்மனதில் ஏதோ ....?


kulandai kannan
பிப் 18, 2024 19:57

சரி, அதுக்கென்ன இப்போ


RaajaRaja Cholan
பிப் 18, 2024 18:46

செல்லாக்காசுகள் வாரிசு என்ற ஒரு விஷயத்தினால் மட்டும் வீரன் ஆகிவிட முடியாது, குடும்பம் தலைமுறை தலைமுறையாக கொள்ளையடிக்கும் பொழுது மாட்டவில்லை என்ற தகிரியும் தான். பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்று இந்த கொள்ளைக்கார படிப்பறிவு இல்லாத வாரிசுகளுக்கு எவன் சொல்லுவான் . இந்த சில்லுண்டிகளின் கூச்சல் கேட்கவே நாராசமாக இருக்கிறது


rajan_subramanian manian
பிப் 18, 2024 17:44

இவருக்கு வாயிலே சனி.பிஜேபி இவரை விட்டாலும், இவர் மத்திய அரசை சீண்டி திமுகவை ஒழிக்காமல் விடமாட்டார் போல.அனுகூல சத்ரூ.(மன்னிக்கவும் சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை.)


kumar
பிப் 19, 2024 02:29

அனுகூல சத்ரூ... = அருகாமையில் இருக்கும் அல்லது அதே பொருள் படும் சொலவடை : உடனிருந்து கொள்ளும் வியாதி


Palani
பிப் 18, 2024 17:03

தமிழ்நாடு மக்களுக்கு எதாவது உபயோகமா செய்யுமா...


Palani
பிப் 18, 2024 17:03

தமிழக மக்களும் உங்கள் குடும்பத்துக்கு அடிமை இல்லை.முதலில் தமிழ்நாடு மக்களுக்கு எதாவது உபயோகமா செய்யுங்கள்.


ஆரூர் ரங்
பிப் 18, 2024 16:47

அறிவாலயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் நேரத்திலேயே அங்கு காங்கிரஸ் அரசு ரெய்டு விட்டதும், பயந்து????‍???? போய் கேட்ட 63 சீட் களையும் வாரி வழங்கிய திமுக மாற வாய்ப்பேயில்லை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ