உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.,விடம் வலியுறுத்தி வருகிறோம்: செல்வப்பெருந்தகை

 ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.,விடம் வலியுறுத்தி வருகிறோம்: செல்வப்பெருந்தகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தி.மு.க., தலைமையிடம் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் வலியுறுத்தி வருகிறார்,” என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். அவர் அளித்த பேட்டி: பா.ஜ., ஆளும் மாநிலங்களில், சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காங்கிரசுக்கு சிக்கல் இது, இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு சமம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், அதற்கு கூட பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா விரைவில் தமிழகம் வரவுள்ளனர். பல மாநிலங்களில், கடைசி நேரத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படுவதால், காங்கிரசுக்கு சிக்கல் ஏற்படுகிறது; கடைசியாக பீஹாரிலும் கூட அப்படித்தான் நடந்தது. தி.மு.க., கூட்டணியில் இரண்டு மாதம் முன்பே, தொகுதி பங்கீடு குறித்து பேசி முடித்தால்தான், முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியும். அதை தான் தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில், தி.மு.க.,விடம் கிரிஷ் ஷோடங்கர் பேசியிருக்கிறார். சொந்த கருத்து 'ஆட்சியில் பங்கு' உள்ளிட்ட விஷயங்களை, தி.மு.க.,விடம் பேசி முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஷோடங்கர் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு குழு தலைவராகவும் அவர் இருப்பதால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தில், 'இண்டி' கூட்டணி வலிமையாக உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி த.வெ.க.,வுக்கு ஆதரவாக பேசியது, அவருடைய சொந்த கருத்து. முதல்வர் ஸ்டாலின், 80 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகளை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

kjpkh
டிச 28, 2025 09:29

சரியான தொடை நடுங்கி. எண்பது சதவீத வாக்குறுதலில் நிறைவேற்றி இருக்கிறார் என்றால் அதை தயவு செய்து பெருந்தகை பட்டியல் போடுங்களேன். இவர் கழுவுற மீனில் நழுவுற மீன்.


Balaa
டிச 28, 2025 09:12

இன்றைய காமெடி.‌ அப்படியே அந்த காமராஜர் ஆட்சி????


vbs manian
டிச 28, 2025 09:08

இலவு காக்கும் கிளி.


Barakat Ali
டிச 28, 2025 09:08

கொடுக்க மாட்டார்கள் என்று காங்கிரசுக்கும் தெரியும் .... வேண்டுமென்றே கேட்டது டிவிகே பக்கம் ஒதுங்கத் திட்டமிட்டுதான் ....


MUTHU
டிச 28, 2025 09:06

இதுவெல்லாம் பொட்டி கூடுதலாய் கேட்க இவர்கள் வைத்திருக்கும் எளிதான மிரட்டல் உத்தி.


duruvasar
டிச 28, 2025 08:20

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் சிபிஐ வேண்டாம் என்ற மேல்முறையிட்டு மனுவை ஸ்டாலின் அரசு வாபஸ் வாங்கும் தலீவரே. சுதானம் தேவை .


VENKATASUBRAMANIAN
டிச 28, 2025 08:14

பதவி ஒன்றே குறி. காங்கிரஸ் இப்படித்தான் அழிவை நோக்கி போகிறது. அடிமையாகவே இருக்க ஆசைப்படும் தலைவர்கள்.


raja
டிச 28, 2025 08:00

கேளு கேளு யாருகிட்ட அண்ணன் கிட்ட தானே கேளு... அப்புறம் ஆட்சியில பங்கு சரி அடிக்கிற கொள்ளையில பங்கு வேணாமா... என்னையும் ஒரு ஆளா மதிச்சி பங்கு கேட்ட பாரு என்ன பண்றது என்னோட இதயத்தில் தான் பங்கு கொடுக்க முடியும் என்று சொல்லுவாரு பாரு ......அப்படின்னு சொல்லுவாரு பாருங்க...


Mani . V
டிச 28, 2025 07:29

கிராமங்களில், "கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை" என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோல் நாட்டில் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று ஆயிரக்கணக்கில் பிரச்சினை இருக்கையில், "ஆட்சியில் பங்கு கேட்போம் சொத்தில் பங்கு கேட்போம்" என்று பினாத்திக் கொண்டு திரிகிறது.


Kannan
டிச 28, 2025 07:26

ஐயா, செவிலியர் தூய்மை பனியாளர் ஆசிரியர்கள் போராட்டம் செய்கிகிறார்கள். திமுக கூட்டனியில் இருக்கும் நீங்க ஏன் வாயை திறக்கல?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை