உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனையோ அவமானங்கள்; குறைந்தபட்ச மரியாதை கூட இல்லை: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் வேதனை!

எத்தனையோ அவமானங்கள்; குறைந்தபட்ச மரியாதை கூட இல்லை: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் வேதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''கிறிஸ்துவர்களின் கோரிக்கைகளை, அரசு அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை; குறைந்தபட்ச மரியாதையை எதிர்பார்க்கிறோம்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் பேசியது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிகோ இருதயராஜ் தலைமையில் இயங்கி வரும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தி.மு.க., கூட்டணியில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவமானம்

கடந்த 15 ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் இடம் பெற்று வருகிறது. இந்த இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில், இனிகோ இருதயராஜ் பேசியதாவது: கிறிஸ்துவ மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட பின்னரும், அரசு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை; நம்மை எதிரிகளாக பார்க்கின்றனர். எத்தனையோ முறை அவமானங்களை சந்தித்துள்ளேன். அவர்களிடம் கெஞ்சியும், கையேந்தியும் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். நான் பட்ட அவமானங்களை, நேரம் வரும்போது விளக்கமாக பேசுவேன்.ஆட்சியில் பங்கு கேட்கவில்லை; அதிகாரப் பகிர்வு கேட்கவில்லை. குறைந்தபட்சம் மரியாதையையும், மாண்பையும் எதிர்பார்க்கிறோம். அதுவும் கிடைக்கவில்லை; சுயமரியாதை இழந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. நம்மை கேலி, கிண்டல் செய்வோருக்கு, பாடம் கற்பிக்க வேண்டும். சட்ட சபை தேர்தல் வரப்போகிறது. கிறிஸ்துவர்களின் ஓட்டுகள், தமிழக அரசியல் கட்சிகளுக்கெல்லாம் தேவைப்படுகின்றன. கட்சிகளின் பார்வை கிறிஸ்துவர்கள் பக்கம் விழுகிறது. கிறிஸ்துவர்களின் ஓட்டுகளுக்கு 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. உபதேசியார் நல வாரியம் அறிவித்ததோடு சரி; எந்த பணிகளும் நடக்கவில்லை.

நுண் அரசியல்

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி, கல்லுாரிகளில், ஆசிரியர்கள், பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை. கிறிஸ்துவர் என்பதால், சகாயம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு பாதுகாப்பு கேட்டு கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது. மாநில நிர்வாகிகள் பேசுகையில், 'சட்டசபை தேர்தலில் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர் பதவிகளை பெற வேண்டும் என்றனர்.தமிழகத்தில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் உள்ளதால், கண்டிப்பாக நிறைவேறும் காலம் வரும். அனைத்து திருச்சபைகளும் ஒருங்கிணைந்த அமைப்பாக, ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.'வரும் 2026 சட்டசபை தேர்தலில், கிறிஸ்துவர்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில், கடந்த காலங்களில் சில அரசியல் நபர்களால் நமக்கு எதிராக அங்கேற்றப்பட்ட, நுண் அரசியல் நடவடிக்கைகளை, மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும். சட்டசபை தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை, இயக்கத் தலைவருக்கு வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான இனிகோ இருதயராஜ், அரசு அதிகாரிகள் மீது பகிரங்கமாக புகார் தெரிவித்திருப்பதும், மரியாதை இல்லை என பேசி இருப்பதும், கூட்டணியில் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்ற கேள்வி, கிறிஸ்துவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

ramesh
மே 20, 2025 19:18

ஒட்டு இல்லாதவரின் அதிருப்தி ஒன்றுக்கும் உதவாது . கூட்டணி விட்டு வெளியில் செல்லுகிறேன் என்று போனால் வீட்டில் உள்ளவர் ஒட்டு கூட கிடைக்காது


RRR
மே 19, 2025 21:23

இந்தத் தமிழ்நாட்டில் இந்துக்களுக்குதான் ஒரு நாதியும் இல்லை... இந்துக்கள்தான் உண்மையான உணர்வுள்ள இந்துக்கள்...


கிருஷ்ணா
மே 19, 2025 19:03

தேர்தல் வரும் பின்னே சாதி மதம் இனம் மொழி உட்பிர்வு கிளைப் பிரிவு பிரிவின் கிளையின் கிளை பின்னி வரும் முன்னே வாங்க வாங்க வண்டியில ஏறுங்க 1சிக்கன் பிரியாணி 1குவாட்டர் 2மட்டான் பிரியாணி 2 குவாட்டர் 1 அண்ணன் வாழ்க 2 அண்ணன் வாழ்க அண்ணன் வாழ்க


Kasimani Baskaran
மே 19, 2025 17:44

ஓவராக திமிர் பேச்சு பேசுவதில் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை. வெள்ளைக்காரன் இல்லை என்றால் அனைவரும் தவழ்ந்துதான் வாழ்ந்திருப்பார்கள் என்று கூட உருட்டுகிறார்கள்.


panneer selvam
மே 19, 2025 17:23

Just for seeking more seats from DMK in forthcoming election , all these dramas and heroic dialogues are enacted .


SENTHIL NATHAN
மே 19, 2025 17:07

சிருபாண்மயிநருனு சொள்ளி சொள்ளி பாதி நாட்டை வலௌச்சு போட்டுட்டானுக


M S RAGHUNATHAN
மே 19, 2025 15:57

ஒவ்வொரு கிறித்துவ சபை பாதிரியாரும் அவர்கள் மதத்திற்கு யாரையேனும் மதம் மாற்றினால் சில பல விவரங்களை கட்டாயம் mandatory தர வேண்டும் . 1. எந்த மதத்தில் இருந்து , ஜாதியில் இருந்து மாறுகிறார் ? 2. பட்டியல் இனத்தவராக இருந்தால் அவருடைய, அவருடைய குடும்பத்தினரின் ஜாதி சான்றிதழ்களை பறிமுதல் செய்து விட்டு அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையில் பெற்ற அனைத்து சலுகைகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். 3. தங்கள் ஜாதிகளை மதத்துடன் சேர்க்கக் கூடாது. அதாவது தலித் கிருத்துவன், நாடார் கிருத்துவன், வன்னியர் கிருத்துவன், ஐயர் கிருத்துவன் என்று சொல்லக் கூடாது. 4. அரசும் எவர் ஒருவர் தன்னை கிருத்துவர் என்று சொன்னால் அவரை பொதுப் பட்டியலில் வைக்க வேண்டும். Open category. 5. Minority என்ற போர்வையில் அரசின் எந்த சலுகைகளும் அனுபவிக்கக் கூடாது. சலுகைகள் ஹிந்து மதத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவருக்கும் மற்றும் ஹிந்து இடைநிலை ஜாதிகளுக்கும் OBC மட்டுமே பொருந்தும் என்று இருக்க வேண்டும். 6. கிருத்துவம் மற்றும் இஸ்லாத்தில் ஜாதிகள் கிடையாது என்பது உண்மையானால் அந்த மதத்தை சேர்ந்த தலைவர்கள் எங்களுக்கு சிறப்பு சலுகைகள் தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும்.


M S RAGHUNATHAN
மே 19, 2025 15:17

தமிழகத்தில் எத்தனை கிருத்துவ மதத்தை சேர்ந்தவர்கள் மந்திரிகள் ஆகவும் MLA க்கள் ஆகவும் இருக்கிறார்கள் தெரியுமா ? முதலில் ஆ ராசா, மற்றும். திருமாவளவன், திருச்சி சிவா ஆகியோர் இந்துக்களாக இருந்தாலும் crypto என்று சொல்கிறார்களே?


krishna
மே 19, 2025 15:09

சீட்டுக்கு துண்டு போட்டாச்சு


Thiagaraja boopathi.s
மே 19, 2025 15:00

நாற்பது சதவிகிதம் அதி புத்திசாலி கள் உள்ளதால் இந்த நிலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை