உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துகளை இழந்துள்ளோம்: அண்ணாமலை

1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துகளை இழந்துள்ளோம்: அண்ணாமலை

மேட்டுப்பாளையம்: ''1986ல் இருந்து தற்போது வரை 1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். திருச்செந்தூரில் கோவிலுக்கு கொடுத்த 16 ஆயிரம் மாடு காணவில்லை,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழாவில் தமிழக பா.ஜ.. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:2026 தேர்தலுக்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறோம். அடக்கு முறையை அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும் என மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். விநாயகர் சிலையை புதிதாக வைக்க முடியவில்லை. அரசின் அடக்க முறை தொடர்கிறது. விநாயகர் சிலையை உடைத்தவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் சாதி பார்ப்பது கிடையாது. பணக்காரன் பார்ப்பது கிடையாது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் விழாவாக உள்ளது.வரும் செப்டம்பர் 10ல் கேரள மாநிலம் பம்பாவில் அனைத்துலக ஐயப்பன் சபரிமலை மாநாடு கம்யூனிஸ்ட் அரசு நடத்துகிறது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினர். அவரை -பாஜ கேரளாவில் கால் வைக்க விட மாட்டோம் என்றோம். உடனே ஒரு அரசு விழாவை ஏற்பாடு செய்து எனக்கு பதிலாக அமைச்சர் தியாகராஜன் கலந்து கொள்வார் என ஸ்டாலின் சொல்கிறார்.உங்களுடன் ஸ்டாலின் என்பது ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது மனுக்களை வைகை ஆற்றில் போட்டு செல்கிறார்கள். 1986ல் இருந்து தற்போது வரை 1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். திருச்செந்தூரில் கோவிலுக்கு கொடுத்த 16 ஆயிரம் மாடு காணவில்லை. இரண்டு அங்கிளும் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இரண்டு அங்கிளும் ஒதுங்கி போங்க. காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு உப்புமா போடுகிறார்கள் மாணவர்களை உப்புமா சாப்பிட வைத்தது தான் இந்த ஆட்சியின் சாதனை. 4.78 லட்சம் ஏக்கர் கோவில் சொத்தினால் வரக்கூடிய வருமானம் குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் ஹிந்து அறநிலைத்துறை இதுவரை சி.ஏ.ஜி.க்கு எந்த ஆவணமும் கொடுக்கவில்லை. ஆய்வு நடத்தப்படவில்லை. கோவில்களில் தங்கம் எவ்வுளவு உள்ளது போன்ற சொத்துக்களின் விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kasimani Baskaran
ஆக 30, 2025 04:55

திராவிட கேடிகள் என்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்களோ அன்றே இது போன்ற கோவில் சொத்து அபகரிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 08:02

யார் அடித்து சுருட்டியுள்ளார்கள் என்ற லிஸ்ட்டையும் வெளியிட சொல்லுமேன்.


Iyer
ஆக 30, 2025 04:51

பாரதத்தை "ஹிந்து ராஷ்ட்ர" என்று அறிவித்து - ஹிந்துக்களுக்கு மட்டும் ஓட்டுரிமை அளிக்கவேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 07:59

ஐயர்களுக்கு ஆளுக்கு 4 வோட்டு, வைசியாளுக்கு, சத்திரியனுக்கு மூணா, ரெண்டா? மதுரை மற்றும் தெக்கே இருக்கேறவங்களுக்கு ஆளுக்கு ஒரு வோட்டு. அப்படி செஞ்சிடலாமா?


vaiko
ஆக 30, 2025 02:11

இரண்டு அங்கிள்கள் என அண்ணாமலை சொல்வது எடப்பாடியையும், ஸ்டைலினையுமா ?


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 30, 2025 08:00

... இருக்குமோ?


Priyan Vadanad
ஆக 30, 2025 00:45

தலைவர் பதவியில் இன்னும் இருப்பதாக நினைத்துக்கொண்டு பழக்க தோஷத்தில் பேசுகிறார் போல தெரிகிறது.


vivek
ஆக 30, 2025 09:05

பிரியன் நீ இன்னும் ஊசி போன வடை சுடுவது நிறுத்தவில்லாயா


Tamilan
ஆக 30, 2025 00:17

பாஜ ஆளும் குஜராத்திலும் மற்ற மாநிலங்களிலும் நாடு முழுவதும் எப்படி?.


vivek
ஆக 30, 2025 07:32

இந்த எடுபிடி tamilan. இங்கே பாேகமாட்டான்


Tamilan
ஆக 30, 2025 00:16

அனைத்தும் மக்களிடம் காலம் காலமாக கொள்ளையடித்தது . ஏமாற்றி உருட்டல் மிரட்டல்கள் மூலமும் பெற்றது. உடனடியாக அணைத்து நிலங்களையும் உரியவர்களுக்கு அவர்களின் வாரிசுதாரர்களுக்கு திருப்பிக்கொடுக்கவேண்டும் . இல்லையெனில் அரசு சட்டம் இயற்ற வேண்டிவரும்


ManiMurugan Murugan
ஆக 29, 2025 23:22

அறநிலைத் துறை மட்டுமில்லை எந்த துறையும் சரியாக நிர்வாகம் இல்லை வருவாய்த் துறை தவிர அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி வருவாய்த்துறையில் அவர்களுக்கு ஏற்ற சுரண்டல் ஆசாமியை வைத்துக் கொண்டு நன்றாக சு வண்டு த் வேலையை நன்றாக செய்கிறது மற்ற துறை எல்லாம் தூங்குகிறது காலை உணவு உப்புமா தின்று விட்டு தூங்குகிறது வரவு செலவு கணக்கு என்றால் என்ன என்று தங்கம் தென்னரசுக்கு தெரியுமா நிதி அறிக்கை என்றப் பெயரில் டெல்லி சென்று காலில் விழுந்து விட்டது நன்றாக த் தெரிகிறது திருப்புவனம் சிபிஐ வழக்கு அவர்களுக்கும் உப்புமா போல ஆண்டவன் இருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்


என்னத்த சொல்ல
ஆக 29, 2025 22:46

போங்க அண்ணாமலைஜி நீங்க சொல்ற எதற்கும் ஆதாரமும் கொடுக்கமாட்டீங்கிறீங்க, வழக்கும் போடா மாட்டீங்கறீங்க.. மத்திய ஆட்சியை உங்கள் கையில் வைத்துக்கொண்டு, எதையாவது ஒன்றை தினமும் அள்ளி தெளித்தால், நாங்க எப்படி நம்பறது..


T.sthivinayagam
ஆக 29, 2025 22:44

தமிழக ஆலயங்களில் பணிக்கு வந்தவர்கள் ஆலயத்தையே அபகரிக்கும் கயவர்களாக மாறும் நிலை உருவாகிக் கொண்டுள்ளதாக கோவில் கட்டி பொன் பொருள் நிலம் உண்டியல் கொடுத்த தமிழர்கள் ஆதங்கபடுகிறார்கள்


vivek
ஆக 30, 2025 07:33

திமுக அரசை குறை சொல்கிறார் சிவநாயகம்


T.sthivinayagam
ஆக 29, 2025 22:42

கோவில் பணியாளருக்காக மட்டுமே பேச எச் ராஜா இருக்கும் போது இந்த அலப்பறையும் தேவையா என மக்கள் கேட்கிறார்கள்


vivek
ஆக 30, 2025 07:33

உனக்கு என்ன கவலை நாயகம்


புதிய வீடியோ