மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
19 minutes ago
நவ.,29ல் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!
11 hour(s) ago | 6
சென்னை: ''நமக்கான சட்டங்களை நாமே புதிதாக உருவாக்க வேண்டும்,'' என, சட்ட பல்கலையில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில், கவர்னர் ரவி பேசினார். சென்னை, பெருங்குடி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில், இந்திய அரசியலமைப்பு தின விழா, நேற்று நடந்தது. இதில், தமிழக கவர்னர் ரவி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம், இன்னும் நிறைவேறவில்லை. சாதாரண மக்களுக்கும், நீதி சென்று சேர வேண்டும். நீதிமன்ற வழக்காடு மொழி, சாதாரண மக்களுக்கு புரியும்படி இல்லை. அவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், வழக்காடு மொழிகள் மாற்றம் பெற வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளில், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் நீதிமன்ற தீர்ப்புகளையே, நாம் இன்றும் வழிகாட்டிகளாக பயன்படுத்தி வருகிறோம். நம் நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளா கிறது. இந்நிலையில், நமக்கான தீர்வுகளை நாமே உருவாக்கும் வகையில், நமக்கு நாமே சட்ட நெறிமுறைகளை உருவாக்கும் பொறுப்பு, நாளைய வழக்கறிஞர்களும், இன்றைய சட்ட மாணவர்களுமாகிய உங்களுக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
19 minutes ago
11 hour(s) ago | 6