உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணன் சொன்னபடியே போதைப்பொருள் கடத்தினோம்: சாதிக் சகோதரர் வாக்குமூலம்

அண்ணன் சொன்னபடியே போதைப்பொருள் கடத்தினோம்: சாதிக் சகோதரர் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'அண்ணன் சொல்படியே போதைப்பொருள் கடத்தினோம்' என, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் வாக்குமூலம் அளித்துள்ளார்.போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்குகளில் கைதான, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,35, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அவரது சகோதரர் முகமது சலீம், 34, நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஏழு நாள் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c2tzvsx2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் அளித்துள்ள வாக்குமூலம்: எங்களின் பிரதான தொழிலே, ெஹல்த் மிக்ஸ் பவுடர் போல வெளிநாடுகளுக்கு, 'சூடோ எபிட்ரின்' போதைப்பொருள் கடத்துவது தான். 2015ல் தொழிலை விரிவுப்படுத்தி விட்டோம். கைது நடவடிக்கையில் இருந்து எங்களை காத்துக்கொள்ள அண்ணன் ஜாபர் சாதிக், தி.மு.க.,வில் சேர்ந்தார். என்னை வி.சி., கட்சியில் சேர்த்து விட்டார்.வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் எங்கள் செல்வாக்கை நிரூபிக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் படம் எடுத்து, அவர்களுக்கு அனுப்பினோம். இதனால், எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.இதை பயன்படுத்தி, அண்ணன் ஜாபர் சாதிக் சொல்படி, மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தினோம். இதன் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டோம். இவ்வாறு முகமது சலீம் வாக்குமூலம் அளித்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Krishnamoorthy Perumal
ஆக 17, 2024 17:40

அண்ணா காட்டிய வழியில் நல்ல தம்பிகள்


Swaminathan L
ஆக 16, 2024 14:09

ஜாபர் சாதிக் வாக்குமூலத்திலும் "அண்ணன் சொல்படித் தான் அத்தனையும் செய்தோம்"னு இருக்காதுன்னு நம்புவோம்.


அசோகன்
ஆக 16, 2024 12:16

எங்கடா போனீங்க 200 ரூபாய் உபிகள்..... ஒருத்தரையும் முட்டு கொடுக்க காணோம்


krishna
ஆக 16, 2024 15:48

OSI QUARTER MAYAKKATHIL SURUNDU VITTARGAL.


Anand
ஆக 16, 2024 11:50

//வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் எங்கள் செல்வாக்கை நிரூபிக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் படம் எடுத்து, அவர்களுக்கு அனுப்பினோம்// அதாவது போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவன் யார் என அவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.


Ramesh Sargam
ஆக 16, 2024 11:47

அண்ணன் சொன்னபடியே போதைப்பொருள் கடத்தினோம்: சாதிக் சகோதரர் வாக்குமூலம். அந்த அண்ணன் என்ன சொல்கிறான் என்றால், எங்கள் பெரிய அண்ணன் சொற்படியே நான் இந்த தொழிலில் இறங்கினேன் என்று கூறுகிறான். யார் அந்த பெரிய அண்ணன் என்று உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்குமே...


RAMAKRISHNAN NATESAN
ஆக 16, 2024 11:40

வழக்கு மந்த கதியில் ....... டீம்காவின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படியா ????


ஆரூர் ரங்
ஆக 16, 2024 10:39

ஆக திமுக, விசிக தலைவர்களுடன் புகைப்படமெடுத்து அனுப்பினால் அன்னிய நாட்டு வணிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது. திமுகவின் புகழ் உலகெங்கும் எப்படியெல்லாம் பரவியுள்ளது?. பாதுகாப்பாக வணிகம் செய்வதை ஊக்குவிக்க வேறு எந்தக் கொம்பனாலும் முடியுமா?


ஆரூர் ரங்
ஆக 16, 2024 10:28

அண்ணன் சொல்படியே அண்ணா வழியில் அயராதுழைக்க திமுக வில் சேர்ந்தார்கள். ஆளும் குடும்ப படத்தையும் தயாரித்தார்.


ஆரூர் ரங்
ஆக 16, 2024 10:27

அண்ணன் சொல்படியே? உண்மையைச் சொல். உண்மையில் விடியல்தானே அந்த அண்ணன்?


N.Purushothaman
ஆக 16, 2024 09:54

ஏம்ப்பா ..நாட்டுல சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவங்க போதை பொருள் கூடவா கடத்த முடியாது ? என்ன நாடு இது ? என்ன சட்டம் ? சமூக நீதியை பற்றி வாய் கிழியிற அளவுக்கு பேசும் திராவிட மாடல் கட்சி இந்த கைதை கண்டித்து ஒரு போராட்டம் கூட நடத்தலையே அது ஏன் ? ஓட்டு வங்கியை தக்க வைக்க அத கூடவா செய்ய முடியாது ? இது அவர்களுக்கு இழைக்கும் அநீதி ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை