உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசியல் அங்கீகாரம் வேண்டும்: சவுராஷ்டிரா சமூகத்தினர் வலியுறுத்தல்

 அரசியல் அங்கீகாரம் வேண்டும்: சவுராஷ்டிரா சமூகத்தினர் வலியுறுத்தல்

மதுரை: 'தமிழக அரசியலில் சவுராஷ்டிரா சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் தரவேண்டும்' என, மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சவுராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. சவுராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கே.ஆர்.எம்., கிஷோர்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''சவுராஷ்டிரா சமூகத்தினருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். ''மொழிவாரி சிறுபான்மையினருக்காக அமைக்கும் குழுக்களில் இச்சமூகத்திற்கும் நிரந்தர பொறுப்பு வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்கள் பேசியதாவது: தி.மு.க., அமைச்சர் மூர்த்தி: சவுராஷ்டிரா கல்லுாரி அமைக்க மதுரையில் இடம் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. நெசவுத்தொழில் பயன்பெறும் வகையில் 100 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்தவர் முதல்வர் ஸ்டாலின். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: உள்ளன்போடு சவுராஷ்டிரா சமூகத்தை வாழ்த்தியவர்கள் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவும் பழனிசாமியும். இதை இச்சமூகம் மறக்க கூடாது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சவுராஷ்டிரா மக்கள் எனக்காக நிற்பர் என்பதற்காக, இங்கு வரவில்லை. உங்களோடு நிற்கிறோம் என்பதை காட்டவே வந்தோம். நெசவுத்தொழில் சமூகத்திற்காக உழவுத்தொழில் மகன் வந்திருக்கிறேன். இவ்வாறு அவர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை