உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் கொட்டியது கனமழை; சோழிங்கநல்லுாரில் 11.9 செ.மீ., பதிவு!

சென்னையில் கொட்டியது கனமழை; சோழிங்கநல்லுாரில் 11.9 செ.மீ., பதிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை, இன்று காலையும் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்தது. பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டதால், பெற்றோர், குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகினர்.சென்னை மாநகரில் நேற்று மாலை 6 மணி முதலே பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இரவு விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று பெற்றோர் எதிர்பார்த்தனர்.ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, பள்ளிகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகள் அனைத்தும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லுாரிக்கு சென்ற குழந்தைகள், பெற்றோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்று மாலை முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை, அதிகபட்சமாக 11.9 செ.மீ., என சோழிங்கநல்லுாரில் பதிவானது.

மற்ற பகுதிகளில் பதிவான மழை விவரம்:

கேளம்பாக்கம் - 10.3 செ.மீ.,அடையாறு - 10.1 செ.மீ.,எழும்பூர் - 9.20 செ.மீ.,திருவொற்றியூர் - 8.90 செ.மீ.,கத்திவாக்கம் - 8.7 செ.மீ.,கிண்டி - 8.6 செ.மீ.,செம்பரம்பாக்கம் - 8 செ.மீ.,கொளத்தூர் - 7.90 செ.மீ.,ஸ்ரீபெரும்புதூர் - 7.40 செ.மீ.,ஆலந்தூர் - 7.30 செ.மீ.,காஞ்சிபுரம் - 7 செ.மீ.,அண்ணா நகர், மேற்கு - 6.80 செ.மீ.,தேனாம்பேட்டை - 6.40 செ.மீ.,மணலி - 6.20 செ.மீ.,புது மணலி டவுன் - 6.10 செ.மீ.,ஐஸ் ஹவுஸ் - 6 செ.மீ.,கோடம்பாக்கம் - 5.90 செ.மீ.,அம்பத்தூர் - 5.60 செ.மீ.,முகலிவாக்கம் - 5.60 செ.மீ.,வில்லிவாக்கம் - 5.60 செ.மீ.,திருவேற்காடு - 5.50 செ.மீ.,உத்தண்டி -5.40 செ.மீ.,மதுரவாயல் - 4.80 செ.மீ.,திரு.வி.க., நகர் - 4.70 செமீ.,புழல் - 4.50 செ.மீ.,வளசரவாக்கம் - 4.50 செ.மீ.,மீனம்பாக்கம் - 4.50 செ.மீ.,நுங்கம்பாக்கம் - 4.4 செ.மீ.,மடிப்பாக்கம் - 4.30 செ.மீ.,குன்றத்தூர் - 4.10 செ.மீ.,மாம்பாக்கம் - 4 செ.மீ.,சோமங்கலம் - 4 செ.மீ.,பெருங்குடி - 4 செ.மீ.,வானகரம் - 4 செ.மீ.,இது தவிர, மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் நல்ல மழை பதிவாகியுள்ளது. அரியலுாரில் 5.5 செ.மீ., பெரம்பலுார் 4.7, நெய்வேலியில் 11.6 செ.மீ., கடலுார் 7.8, காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதுார் தலா 7 செ.மீ., மழை பதிவானது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணிக்கு நீர் இருப்பு 120 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 73,330 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 9 மணி முதல் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அணைகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்:

சோலையார் அணை

நீர்மட்டம்: 161.07/160 அடிநீர்வரத்து: 2189.62 கன அடிவெளியேற்றம்: 2412.77 கன அடி

பரம்பிக்குளம் அணை:

நீர்மட்டம்: 67.88/72 அடிநீர்வரத்து: 2707 கன அடி.வெளியேற்றம்: 127 கன அடி

ஆழியார் அணை:

நீர்மட்டம்: 119.10/120 அடி.நீர்வரத்து:700 கன அடி.வெளியேற்றம்:538 கன அடி.

உடுமலை திருமூர்த்தி அணை

நீர்மட்டம்:28.37/60 அடிநீர்வரத்து: 111 கன அடிவெளியேற்றம்: 26 கன அடி

அமராவதி அணை

நீர்மட்டம்: 89.05/90அடி.நீர்வரத்து:1150 கனஅடிவெளியேற்றம்: 805கன அடி.

17 மாவட்டங்களில் கனமழை கொட்டுமாம்!

இன்று மட்டும் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஆக 05, 2024 17:43

எவ்வளவு மழை.பெஞ்சாலும் தாக்குபிடிக்க தயாரா இருக்கோம். நாங்க ஊட்டிலேயே இருப்போம். மக்கள் கஷ்டப்பட ரெடியா இருக்காங்க. 4000 கோடி ரூவாய்க்கு.கணக்கு காட்டிட்டோம்


Yasararafath
ஆக 05, 2024 15:23

மழை எப்ப நிற்கும்


ஆரூர் ரங்
ஆக 05, 2024 13:54

பேக்கேஜ் மீண்டும் பல்லிளிக்கிறது . சாக்கடை நீர் தெருவிலும் வீட்டுக் குழாயிலும். மேடு பள்ள சாலையில் மழைநீர் தேக்கம். இன்னும் இவர்களை நம்பி வாக்களிக்க ஆளிருக்கே.


Narayanan
ஆக 05, 2024 13:26

மழைக்காலம் வந்தே விட்டது. பல இடங்களில் பொதுவாக மடிப்பாக்கத்தில் அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு இருக்கிறது. வடிகால் சரியாக அமைத்து விரைவில் சாலை இடுங்கள். அனைத்து சாலைகளும் சரியாக இல்லை. 2015 நிலை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .


ganapathy
ஆக 05, 2024 12:58

தொளபதி என்னய்யா நடக்குது?


Ramesh Sargam
ஆக 05, 2024 12:43

மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறதா? அல்லது வானிலை ஆய்வு மையும் எங்களுக்கு இதுவரை ஒரு எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என்று உட்கார்ந்திருக்கிறார்களா?


மேலும் செய்திகள்